/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-08T181645.230.jpg)
IPL 2021, RCB vs DC match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
#RCB have won the toss and they will bowl first against #DelhiCapitals.
Live - https://t.co/rjuPrt7Rqt#RCBvDC#VIVOIPLpic.twitter.com/mjTcu4ZLfU— IndianPremierLeague (@IPL) October 8, 2021
டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரித்வீ ஷா - ஷிகர் தவான் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இதனால் அந்த அணி முதல் விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்து. இந்த ஜோடியில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 43 ரன்கள் சேர்த்த ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் மறுமுனையில் இருந்த ப்ரித்வீ ஷா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
At the halfway mark #DelhiCapitals are 88/0
Live - https://t.co/rjuPrt7Rqt#VIVOIPL#RCBvDCpic.twitter.com/TQ4gt71Jrn— IndianPremierLeague (@IPL) October 8, 2021
தொடர்ந்து வந்தவர்களில் ஹெட்மேயர் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். எனவே டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.
Innings Break!
Siraj brings the innings to a close by getting the scalp of Hetmyer.#DelhiCapitals post a total of 164/5 on the board. #RCB chase coming up shortly. Stay tuned!
Scorecard - https://t.co/z5hns662XQ#RCBvDC#VIVOIPLpic.twitter.com/8909xKDPiU— IndianPremierLeague (@IPL) October 8, 2021
பெங்களூரு அணியில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், சாஹல், ஹர்ஷல் பட்டேல், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 165 ரன்கள் கொண்ட இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான கேப்டன் கோலி (4) - தேவதூத் படிக்கல் (0) ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத் அணிக்கு வலுவான ரன்களை சேர்த்த நிலையில் அவருடன் மறுமுனையில் இருந்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி ஆட்டமிழந்தார்.
Anrich Nortje strikes in the very first over and it's a golden duck for Devdutt Padikkal.
Live - https://t.co/rjuPrt7Rqt#VIVOIPL#RCBvDCpic.twitter.com/AEQjo8CTNQ— IndianPremierLeague (@IPL) October 8, 2021
எனவே பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரீகர் பாரத். அணிக்கு தேவையான ரன்களை சேர்த்து ரன் ரேட்டை உயர்த்தி வந்த இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் அவ்வப்போது சரிவை சந்தித்த இந்த ஜோடி அணியை வெற்றி பெறச் செய்ய கடைசி 6 பந்துகளில் 14 சேர்க்க வேண்டி இருந்தது. இதில் முதல் மூன்று பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 7 ரன்களை சேர்த்து தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
A quick-fire 50-run partnership comes up between Maxwell and KS Bharat.
Live - https://t.co/z5hns662XQ#RCBvDC#VIVOIPLpic.twitter.com/7gnEbLgYLM— IndianPremierLeague (@IPL) October 8, 2021
கடைசி மூன்று பந்துகளை சந்தித்த ஸ்ரீகர் பாரத் 5வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். அந்த ஓவரை வீசிய டெல்லியின் ஆவேஷ் கான் கடைசி பந்தை ஒய்டாக வீசவே, பெங்களூரு அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பந்தை மீண்டும் சந்திக்க நின்ற ஸ்ரீகர் பாரத் பவுண்டரிக்கு விரட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி
FIFTY for @KonaBharat 👏👏
Live - https://t.co/z5hns662XQ#RCBvDC#VIVOIPLpic.twitter.com/JggljYjquz— IndianPremierLeague (@IPL) October 8, 2021
பெங்களூரு அணியை த்ரில் வெற்றி பெறச் செய்து களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரீகர் பாரத் 78 ரன்களும் (52 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) க்ளென் மேக்ஸ்வெல் 51 ரன்களும் (33 பந்துகளில் 8 பவுண்டரிகள்) குவித்தனர்.
Scenes from the #RCB camp as @KonaBharat finishes it off in style.#VIVOIPL#RCBvDCpic.twitter.com/ApyHdTuJ9U
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Kona Bharat is adjudged Man of the Match for his match-winning knock of 78* as #RCB win by 7 wickets.#VIVOIPLpic.twitter.com/SaatCIzQd5
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
இந்த சிறப்பான வெற்றி மூலம் பெங்களூரு அணி பட்டியலில் எந்தவித மாற்றமும் இன்றி 3வது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. தோல்வி கண்டுள்ள டெல்லி அணி முதலிடத்திலேயே நீடிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து. இதனால் கொல்கத்தா அணி 4 வது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
Play-off schedule of #IPL2021:
CSK vs DC - October 10 (Qualifier 1)
RCB vs KKR - October 11 (Eliminator)— Johns. (@CricCrazyJohns) October 8, 2021
தற்போது இறுதிப்போட்டிக்கான அட்டவணை வெளியிப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 10ம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 11ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.