scorecardresearch

RCB vs KKR Highlights: சுழலில் கலக்கிய வருண் : கொல்கத்தா அணிக்கு 3-வது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

ipl 2023 live score | rcb vs kkr live score | bangalore vs kolkata score
ஐபிஎல் 2023 பெங்களூர் vs கொல்கத்தா ஸ்கோர்

Bangalore vs Kolkata IPL 2023 Score in tamil: 16வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

Indian Premier League, 2023M.Chinnaswamy Stadium, Bengaluru   01 June 2023

Royal Challengers Bangalore 179/8 (20.0)

vs

Kolkata Knight Riders   200/5 (20.0)

Match Ended ( Day – Match 36 ) Kolkata Knight Riders beat Royal Challengers Bangalore by 21 runs

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஜோசன் ராய் – ஜகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜகதீசன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வைசாக் விஜயகுமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் ராயுடன் ஜோடி சேர்ந்தார்.

இதனிடையே அதிரடியாக விளையாடிய ஜோசன் ராய் அரைசதம் கடந்த நிலையில், 29 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து வைசாக் விஜயகுமார் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ரானா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. சற்று நிதானமாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 26 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அரைசதத்தை நெருங்கிய கேப்டன் ரானா 21 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 48 ரன்கள் குவித்து வீழ்ந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. விசா 3 பந்துகளில் 2 சிக்சருடன் 12 ரன்களும், ரின்கு சிங் 10 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில், வைசாக் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சவிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 201 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசிய கேப்டன் டூபிளசிஸ், அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் குவித்து சூயாஷ் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சபாஷ் அகமது 2 ரன்களில் சூயாஷ் சர்மா பந்துவீச்சிலும், மேக்ஸ்வெல் 5 ரன்களில் சக்ரவர்த்தி பந்துவீச்சிலும்  அடுத்தடுத்து வீழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய லேம்ரர் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதில் அரைசதம் கடந்த விராட்கோலி 37 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் குவித்து ரசல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய லேம்ரர் 18 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 34 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 22 ரன்களும், பிரபுதேசாய் 9 பந்துகளில் 10 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் அடுத்து 12 பந்துகளில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை வீசிய ஆந்த்ரே ரசல், ஒரு சிக்சருடன் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பொங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தா அணி தரப்பில் சுழலில் கலக்கிய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரசல், சூயாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rcb vs kkr live cricket score royal challengers bangalore vs kolkata knight riders ipl 2023 36th match live updates in tamil