IPL 2024 | Royal Challengers Bangalore | Lucknow Super Giants IPL 2024 Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs LSG Live Score, IPL 2024
பாப் டு பிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது.
கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது. இந்த வெற்றி உத்வேகத்தை தொடரவே லக்னோ அணி நினைக்கும். ஆனால், சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
பெங்களூர் Vs லக்னோ நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பெங்களூரு அணி 3ல் வெற்றி பெற்றுள்ளது, லக்னோ 1 முறை வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடினர்கள். இந்த ஓபனிங் ஜோடி பங்காளி ஆட்டத்தில் 50 ரன்கள் குவித்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5.3 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்தபோது, 16 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்த கே.எல். ராகுல் கிளென் மேக்ஸ்வெல் பந்தில் டாகர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல், முஹம்மது சிராஜ் பந்தில் அனுஜ் ராவத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் டாகரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குயிண்டன் டிகாக் அரைசதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக அடித்து ஆடினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தபோது, குயிண்டன் டிகாக் 56 பந்துகளில் 81 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரீசி டாப்ளே பந்தில் டாகர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஆயுஷ் படோனி பேட்டிங் செய்ய வந்தார்.
ஆயுஷ் படோனி வந்த வேகத்திலேயே யஷ் தயால் பந்தில் டுபிளெஸியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, க்ருணால் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 182 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இதைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுபிளெஸிஸ் களம் இறங்கினர்.
விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுபிளெஸிஸ் நிதானமாக விளையாடிய நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4.2 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது, 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, சித்தார்த் பந்தில் படிக்கல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரஜத் படிதார் பேட்டிங் செய்ய வந்தார்.
டுபிளெஸிஸ் 13 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில், தெவ்தத் படிக்கல் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். கிளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே, மயங்க் யாதவ் பந்தில், நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து வெளியேறினார். அடுத்து கேமரான் கிரீன் பேட்டிங் செய்ய வந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 எடுத்திருந்தபோது, கேமரான் கிரீன் 9 ரன்கள் எடுத்து, மயங்க் யாதவ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அனுஜ் ராவத் பேட்டிங் செய்ய வந்தார்.
அனுஜ் ராவத் 11 ரன்கள் மட்டுமே எடுத்து, ஸ்டாய்னிஸ் பந்தில் படிக்கல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த, லோம்ரர் அதிரடி சரவெடியாக அடித்தார். 13 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே அசைத்துப் பார்த்தார். ஆனால்,
ஆனால் மறுமுனையில், பட்டிதார், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தபோது, 33 ரன்கள் அடித்திருந்த லோம்ரோர், யஷ் தாக்கூர் பந்தில் நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.