scorecardresearch

தந்தை அவுட் ஆனதும் விரக்தியடைந்த மகன்… சேரை ஓங்கி அடிக்கும் வைரல் காட்சி!

AB de Villiers’ son express his angry after Bumrah took his father’s wicket Tamil News: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ராவின் பந்தில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த நிலையில், விரக்கியடைந்த டிவில்லியர்ஸின் மகன் சேரை கையால் ஓங்கி அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

RCB VS MI match highlights in tamil: AB de Villiers' son express his angry

Bangalore vs Mumbai match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்களும், கேப்டன் கோலி 51 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து 167 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கு சரியான தொடக்க கிடைத்து இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களின் (ரோகித் சர்மா – குயின்டன் டி காக்) விக்கெட்டுக்கு பிறகு அந்த அணியின் மொத்த விக்கெட்டுக்கும் மளமளவென சரிந்தது.

இளம் வீரர் இஷான் கிஷன், முன்னணி வீரரர்கள் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவரிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.

எனவே, பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு பந்து வீச்சால் நெருக்கடி கொடுத்த பெங்களூரு அணி ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டினார். இந்த அசத்தலான வெற்றி மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பல சுவாரஷ்யங்களோடு நடந்த இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி 51 ரன்களும், 3வது வீரராக களம் புகுந்து பாரத் 32 ரன்களும், மேக்ஸ்வெல் 56 ரன்களும் குவித்து அசத்தி இருந்தனர்.

கேப்டன் கோலியின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய அந்த அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் தனது பாணியில் ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார் என எதிர்பார்க்கையில் 6 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து பும்ராவின் வேகத்தில் சிக்கி வெளியேறினார். இந்த ஆட்டத்தை உற்று கவனித்து வந்த டிவில்லியர்ஸின் மகன் தனது தந்தை ஆட்டம் இழந்ததும் விரக்தியடைந்தார். மேலும், அந்த கோபத்தை வெளிப்படுத்திய அவர் எதிரில் இருந்த சேரை கையால் ஓங்கி அடித்தார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rcb vs mi match highlights in tamil ab de villiers son express his angry

Best of Express