மும்பை இந்தியன்ஸ் வெற்றியை மாற்றியமைத்த சூப்பர் ஓவர்!

இருவரும் இணைந்து பெங்களூரு அணியின் வெற்றியை கடினமாக்கினர்.

By: Updated: September 29, 2020, 08:51:28 AM

rcb vs mi match review : ஐபிஎல் 13வது சீசனின் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு அணி சார்பாக தேவ்தத் பட்டிக்கல் மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 52 ரன்களை குவித்து ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி வழக்கம்போல ஏமாற்றம் தந்து 11 பந்துகளுக்கு 3 ரன்களை தந்தார்.

பின்னர் ஏ.பி டிவில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். தேவ்தத் அரைசதம் அடிக்க மற்றொருபுறம் டிவில்லியர்ஸ் அரை சதம் அடித்தார்.20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து 201 ரன்களை குவித்தது.

மும்பை இந்தியன்ஸ்:

7 ஓவர்கள் முடிவில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தி மும்பை அணி தடுமாறியது. பின்னர் இஷான் கிஷான் , கிரோன் பொல்லார்டும் அதிரடியை காண்பிக்க இருவரும் அரைசதம் அடித்தனர்.

ஆட்ட நேரமுடிவில் 6 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் 2 பந்துகளில் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த மும்பை 3 மற்றும் 4வது பந்துகளை சிக்சருக்கு விரட்டினார் இஷான் கிஷான், ஆனால் 5 வது பந்தில் எதிர்பாரத விதமாக இசுரு உடனாவின் பந்தில் அவர் ஆட்டமிழந்ததால் அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. மேலும் ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் பொல்லார்ட். இதனல் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஓவர்:

இரு அணிகளும் 201 ரன்கள் எடுத்து ஆட்டம் சமமானதால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வந்த பெங்களூரு அணி 6 பந்துகளுக்கு 11 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி.ஐபிஎல் 13வது சீசனின் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Rcb vs mi match review rcb vs mi ipl match highlights

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X