RCB vs RR highlights: ஹேசில்வுட் அசத்தல் பந்துவீச்சு: சொந்த மண்ணில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான போட்டி பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான போட்டி பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2025 RCB vs RR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: RCB vs RR LIVE Cricket Score, IPL 2025: Toss and playing XI coming from Bengaluru

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில், விராட்கோலி – பில்ட் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அணியின் ஸ்கோர் 6.4 ஓவர்களில், 61 ரன்களை எட்டியபோது சால்ட் ஆட்டமிழந்தார். 23 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த படிக்கல் விராட்கோலியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

படிக்கல் – கோலி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க ராஜஸ்தான் அணி மேற்கொண்ட முயற்சிக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை. மேலும் பெங்களூர் அணி வீரர்கள் கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தான் வீரர்கள் தவறவிட்டதும், பெங்களூர் அணி ரன் குவிக்க காரணமாக அமைந்தது.

Advertisment
Advertisements

படிக்கல் – கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு, 95 ரன்கள் சேர்த்தபோது, விராட்கோலி ஆட்டமிழந்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 70 ரன்கள்எடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில், படிக்கலும் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரி 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் படித்தார் 1 ரன்னில் வீழந்தாலும், இறுதிக்கட்டத்தில் ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

20 ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட், 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆன நிலையில், ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில், சந்தீப் சர்மா 2, ஹசரங்கா, ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

206 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமனையில், வைபவ் சூரியவன்ஷி, 12 பந்துகளில் 2 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நித்தீஷ் ரானா 28, கேப்டன் ரியான் பராக் 10 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், 19 பந்துகளில் 3 சிக்சர்7 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய துருவ் ஜோரேல், 34 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன், 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-வது ஓவரை வீசிய ஹேசில்வுட், 3-4 பந்துகளில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி செக் வைத்து ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள், முதல் பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில், 3-வது பந்தில் ஒரு ரன்அவுட் கிடைத்தது, இந்த ஓவரில் மொத்தம் 5 ரன்களே கிடைத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்ததால் பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி சொந்த மண்ணில் 3 தோல்விக்கு பிறகு வெற்றியை ருசித்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் பெங்களூர் அணி உள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக்(கே), துருவ் ஜூரல்(வி), சிம்ரான் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார்(கே), தேவ்தத் பாடிக்கல், ஜிதேஷ் சர்மா(வி), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

Rcb Vs Rr Ipl Cricket

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: