Royal Challengers Bangalore vs Royal Challengers Bangalore Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், அதிகபட்சமாக அரைசதம் அடித்த தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.
ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் , பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும், ரூட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் பெங்களுரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய ஹெட்மைர் மட்டும் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முடிவில் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ராஜஸ்தான் 59 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் பர்னெல் 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல், கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Job done in ten and a half overs 🔥
✌️points in the bag and a significant boost to our Net Run Rate! 🙌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RRvRCB pic.twitter.com/I9TKdIYO7d— Royal Challengers Bangalore (@RCBTweets) May 14, 2023
மோசமான தோல்வி
இந்நிலையில், பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 59 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால், ஐபிஎல்லில் குறைந்த ரன்கள் எடுத்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 58 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதன் 2வது குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பெங்களூரு அணியாகும். அந்த அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்னில் ஆல்-அவுட் ஆகி வெளியேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணிக்கான குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர்
58 vs பெங்களூரு - கேப் டவுன், 2009
59 vs பெங்களூரு - ஜெய்ப்பூர், இன்று (2023)
81 vs கொல்கத்தா - கொல்கத்தா, 2011
85 vs கொல்கத்தா - ஷார்ஜா, 2021
ஐ.பி.எல்-லில் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர்
49 - பெங்களூரு vs கொல்கத்தா, கொல்கத்தா, 2017
58 - ராஜஸ்தான் vs பெங்களூரு, கேப் டவுன், 2009
59 - ராஜஸ்தான் vs பெங்களூரு, ஜெய்ப்பூர், இன்று
66 - டெல்லி vs மும்பை, டெல்லி, 2017
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.