Advertisment

#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score

#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய போட்டி, இரு அணிக்கும் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RCB vs SRH, 51st Match, Live Cricket Score

RCB vs SRH, 51st Match, Live Cricket Score

#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய போட்டி, இரு அணிக்கும் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை!

Advertisment

#RCBvsSRH ஐபிஎல் 2018 தொடரின் 51-வது ஆட்டம், பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கனே வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பொறுத்தவரை, இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க கடைசி இரு போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு எதிராக பெங்களூரு வெற்றி பெற்றதால், அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே இன்றும் வெற்றியை தொடரும் முனைப்பில் இருக்கிறார்கள்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 14 போட்டிகளும் முடிந்த பிறகு பட்டியலில் முதலிடம் பெறும் அணிக்கு, அடுத்த சுற்றில் கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனவே முதலிடத்தை தொடர, அடுத்த இரு போட்டிகளிலும் ஜெயிக்க சன் ரைசர்ஸ் மல்லுக்கட்டும்.

அதேசமயம், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகர்கள் இன்று சன் ரைசர்ஸ் வெற்றியை விரும்ப மாட்டார்கள் என்பது நிஜம்! காரணம், சன் ரைசர்ஸ் சரிவை சந்தித்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை எட்டும் வாய்ப்பு உண்டு. அந்த வகையில் சென்னை அணி ரசிகர்களுக்கும் இது முக்கிய போட்டி.

பரபரப்பாக இந்த ஆட்டத்தில் லைவ் ஸ்கோர் இங்கு...

 

Ipl 2018 Virat Kohli Sunrisers Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment