Sunrisers Hyderabad | Royal Challengers Bangalore | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs SRH Live Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், சவுரவ் சவுகான், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லி, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்
ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் பெங்களூரு பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். ஹெட் 20 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். ஹைதராபாத் 108 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் விழுந்தது. அபிஷேக் 34 ரன்களில் அவுட் ஆனார். அவர் டோப்லே பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக கிளாசன் களமிறங்கினார். ஹெட்- கிளாசன் ஜோடி பவுண்டரி மழையாக பொழிந்தது. ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் 102 ரன்களில் ஹெட் ஆட்டமிழந்தார். அவர் பெர்குசன் பந்தில் டூபிளசிஸிடம் கேட்ச் கொடுத்தார். ஹெட் 8 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசினார். அடுத்ததாக மார்க்ரம் களமிறங்கி அதிரடி காட்டினார். மறுமுனையில் சிக்சர் மழை பொழிந்த கிளாசன் அரை சதம் அடித்தார்.
அணியின் எண்ணிக்கை 231 ஆக இருந்தப்போது கிளாசன் அவுட் ஆனார். அவர் 31 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். பெங்களூரு தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்களையும், டோப்லே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பெங்களுரூ பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தது. கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். மார்கண்டே பந்தில் கோலி போல்டானார். அடுத்ததாக ஜாக்ஸ் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய படிதார் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் டூபிளசிஸ் அரை சதம் அடித்தார்.
அடுத்து சௌகான் களமிறங்கிய நிலையில் டூபிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கிய நிலையில், சௌகான் முதல் பந்திலே டக் ஆனார். இதனையடுத்து மஹிபால் களமிறங்கினார். அவர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அனுஜ் ராவத் களமிறங்கினார், மறுமுனையில் ஆடி தினேஷ் கார்த்திக் அரை சதம் அடித்தார்.
தொடந்து அதிரடியாக ஆடிய கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக விஜய்குமார் களமிறங்கினார். அனுஜ் 25, விஜய்குமார் 1 ரன்னில் இருந்தப்போது பெங்களூரு ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இதனால் ரன்கள் 25 வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. கம்மின்ஸ் 3 விக்கெட்களையும், மார்கண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே 5 போட்டிகளில் கோட்டை விட்ட அந்த அணிக்கு இனி வரும் போட்டிகள் முக்கிய போட்டிகளாக இருக்கும். எனவே, சரிவில் இருந்து மீண்டு வர பெங்களூரு அணி எல்லா வகையிலும் போராடும்.
மறுபுறம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத், 5 போட்டிகளில் 3ல் வெற்றி, 2ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் அதிரடியாக வெற்றியைப் பெற்றுள்ள அந்த அணி அதே உத்வேகத்தை தொடரவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ரன் மழை
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடிய ஆடுகளம் பேட்மேன்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. சிறிய மைதானம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.
நேருக்கு நேர்
பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 10 ஆட்டத்தில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.