IPL 2021, CSK vs PBKS match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அபுதாபியில் நடந்த 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
#RCB have won the toss and they will bowl first against #SRH.
Live - https://t.co/UJxVQxyLNo #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/h6a4ZLkShI— IndianPremierLeague (@IPL) October 6, 2021
எனவே, ஐதராபாத் அணியின் ஜேசன் ராய் - அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 1 சிக்ஸர் 1 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஜார்ஜ் கார்டன் வீசிய 1.5 வது ஓவரில் மேக்ஸ்வெல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் தொடக்க வீரர் ஜேசன் ராயுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், ஐதராபாத் அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 50 ரன்களை சேர்த்தது.
At the end of the powerplay #SRH are 50/1.
Live - https://t.co/EqmOIV0UoV #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/t4UN4m3mjf— IndianPremierLeague (@IPL) October 6, 2021
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை விரட்டிய வில்லியம்சன் 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ப்ரியம் கார்க் 1 சிக்ஸர் அடித்து அவுட் ஆனார். மறுமுனையில் 5 பவுண்டரிகளை ஓடவிட்ட தொடக்க வீரர் ஜேசன் ராய் 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
A wicket of the first and last ball of the over from Dan Christian.
This time its the well-set batter Jason Roy who has to depart.
Live - https://t.co/UJxVQxyLNo #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/elZ6TBPREz— IndianPremierLeague (@IPL) October 6, 2021
அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்து ரன் சேர்க்க தடுமாறிய ஐதராபாத் அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்திருந்தது. இந்த விக்கெட் இழப்பிற்கு பின் வந்த வீரர்கள் சில பவுண்டரிகளை விரட்டி ஆட்டமிழ்ந்தனர். எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 141 ரன்கள் சேர்த்தது.
Innings Break!
A wonderful comeback by #RCB there.
After being put to bat first, #SRH post a total of 141/7 on the board.#RCB chase coming up shortly.
Scorecard - https://t.co/EqmOIUJjxn #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/VQrGqd1s0w— IndianPremierLeague (@IPL) October 6, 2021
ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் நேர்த்தியான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஐதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்த பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும்,டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தெடர்ந்து 142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதலாவது ஓவரில் lbw முறையில் அவுட் ஆனார். பின்னர் வந்த டேனியல் கிறிஸ்டியன் 1 ரன்னுடனும், ஸ்ரீகர் பாரத் 12 ரன்னுடனும் (1 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட) ஆட்டமிழந்தனர்.
Bhuvneshwar Kumar strikes!
Virat Kohli is trapped LBW!
Live - https://t.co/EqmOIV0UoV #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/0z8TBw6JXF— IndianPremierLeague (@IPL) October 6, 2021
இவர்களது விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் க்ளென் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்தார். அணிக்கு வலுவான ரன்களை சேர்த்த இந்த ஜோடியில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விளாசிய க்ளென் மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவருடன் மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் படிக்கல் ரஷீத் கான் சுழலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Just what #RCB needed!
A fine 50-run partnership comes up between @devdpd07 & @Gmaxi_32 💪💪
Live - https://t.co/EqmOIUJjxn #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/fUTuXeAYgo— IndianPremierLeague (@IPL) October 6, 2021
இதனால் சற்று பின்னடைவை சந்தித்த பெங்களூரு அணிக்கு அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் ஷாபாஸ் அகமது ஜோடியின் ரன் சேர்ப்பு அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேலும், அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. இந்த தருணத்தில் பந்து வீச வந்த ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் ஷாபாஸ் அகமதுவின் விக்கெட்டை கைப்பற்றியதோடு 5 ரன்களை மட்டுமே விடக்கொடுத்திருந்தார்.எனவே பெங்களூரு அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
.@SunRisers have defended it and WIN by 4 runs.#VIVOIPL #RCBvSRH pic.twitter.com/BW4kPrl7M6
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய 20வது ஓவரின் 4வது பந்தில் டிவில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து மிரட்டவே பெங்களூரு அணிக்கு வெற்றி கனியும் தருவாயில் இருந்தது. எனினும், நம்பிக்கை தளராமல் தொடர்ந்து வேகத்தில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
A flurry of emotions in both the camps as @SunRisers clinch a thriller against #RCB.
Scorecard - https://t.co/EqmOIV0UoV #RCBvSRH #VIVOIPL pic.twitter.com/6EicLI02T0— IndianPremierLeague (@IPL) October 6, 2021
எனவே, கடைசி ஓவரிகளில் மிகவும் கட்டுப்பாடுடன் பந்துகளை வீசிய ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பட்டியலில் முன்னேறா விட்டாலும் அந்த அணிக்கு ஆறுதல் தரும் விதமாக அமைத்துள்ளது. கடைசி வரை போராடி தோல்வியை தழுவி பெங்களூரூ அணி பட்டியலில் அதே 3ம் இடத்திலே உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நாளை (வெள்ளிக்கிழமை) அதன் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி பிளே-ஆப்குள் நுழைவதற்கு முட்டுக்கட்டை போட முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:54 (IST) 06 Oct 2021பெங்களூரு அணியை வீழ்த்திய ஐதராபாத்; 4 வித்தியாசத்தில் திரில் வெற்றி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் துல்லியமான பந்து வீச்சை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- 23:05 (IST) 06 Oct 2021தொடக்க வீரர் படிக்கல் அவுட்!
142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த தேவதூத் படிக்கல் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- 22:53 (IST) 06 Oct 202115 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி!
142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
- 22:52 (IST) 06 Oct 2021மேக்ஸ்வெல் ரன் அவுட்!
142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணியில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விளாசி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த க்ளென் மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
- 22:25 (IST) 06 Oct 2021அடுத்தடுத்த வெக்கேட்டு இழப்பு; நிதானம் காட்டும் பெங்களூரு அணி!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை சேர்த்துள்ளது.
தற்போது களத்தில் இருக்கும் தேவதூத் படிக்கல் - க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- 22:09 (IST) 06 Oct 2021புதுமுக வீரர் உம்ரான் மாலிக் முதல் ஐபிஎல் விக்கெட்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் களமிறங்கியுள்ள ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த புதுமுக வீரர் உம்ரான் மாலிக் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவர் பெங்களுரு அணியில் 12 ரன்களை சேர்த்த ஸ்ரீகர் பாரத்தின் விக்கெட்டை கைப்பற்றினார்.
- 22:06 (IST) 06 Oct 2021பவர் முடிவில் பெங்களூரு அணி!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி பவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து37 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:05 (IST) 06 Oct 2021பவர் முடிவில் பெங்களூரு அணி!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி பவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து37 ரன்களை சேர்த்துள்ளது.
- 21:39 (IST) 06 Oct 2021கேப்டன் கோலி lbw முறையில் அவுட்!
142 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி புவனேஸ்வர் குமார் lbw முறையில் அவுட் ஆனார்.
- 21:20 (IST) 06 Oct 2021ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 20:51 (IST) 06 Oct 2021அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க தடுமாறும் ஐதராபாத் அணி!
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மேலும் அந்த அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 107 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:48 (IST) 06 Oct 202115 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி!
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 107 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:02 (IST) 06 Oct 2021பவர் பிளே முடிவில் ஐதராபாத் அணி!
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்துள்ள நிலையில் 50 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:41 (IST) 06 Oct 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்; அபிஷேக் சர்மா அவுட்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, ஐதராபாத் அணியின் ஜேசன் ராய் - அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 1 சிக்ஸர் 1 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஜார்ஜ் கார்டன் வேகத்தில் சிக்கி வெளியேறினார்.
- 19:19 (IST) 06 Oct 2021இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:
விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ப்ரியம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.
A look at the Playing XI for rcbvsrh
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
Live - https://t.co/EqmOIV0UoV rcbvsrh vivoipl pic.twitter.com/nTL6eFxasb - 19:18 (IST) 06 Oct 2021ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
rcb have won the toss and they will bowl first against srh.
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
Live - https://t.co/UJxVQxyLNo rcbvsrh vivoipl pic.twitter.com/h6a4ZLkShI - 19:15 (IST) 06 Oct 2021ஐதராபாத் அணியில் வார்னர் - நடராஜன் இல்லை!
ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.
கொரோனா தனிமைப்படுத்தலில் தற்போது மீண்டு வந்து பயிற்சி மேற்கொண்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
- 19:02 (IST) 06 Oct 2021இன்றைய ஆட்டத்தில் எதிர்பார்க்கப்படும் மைல்கல்கள்:
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதன் 100 வது ஐபிஎல் வெற்றியை இன்றிரவு எதிர்பார்க்கிறது.
ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை (27) முறியடிக்க ஹர்ஷல் படேலுக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் தேவை.
250 ஐபிஎல் சிக்ஸர்களை கடக்க ஏபி டிவில்லியர்ஸுக்கு இரண்டு சிக்ஸர்கள் தேவை.
இந்த சீசனில் பவர்பிளேவில் விராட் கோலி: எஸ்ஆர்: 133, சராசரி: 52
கேன் வில்லியம்சன் ஏழு இன்னிங்ஸ்களில் ஆர்சிபிக்கு எதிராக ஐந்து அரைசதங்களை அடித்துள்ளார்.
- 18:29 (IST) 06 Oct 2021இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
கேன் வில்லியம்சன், ஜேசன் ராய், ஸ்ரீவத் கோஸ்வாமி, ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சித்தார்த் கவுல், பசில் தம்பி, உம்ரான் மாலிக்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
விராட் கோலி, தேவதூத் படிக்கல், டான் கிறிஸ்டியன், க்ளென் மேக்ஸ்வெல், அப் டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, எஸ் பாரத், ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், ஒய் சாஹல், நவ்தீப் சைனி.
- 18:25 (IST) 06 Oct 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று மாலை 7:30 மணிக்கு தொடங்கும் 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
Hello & welcome from Abu Dhabi 👋
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
It's the @imVkohli-led @RCBTweets who face Kane Williamson's @SunRisers in Match 5⃣2⃣ of the vivoipl. 👍 👍 rcbvsrh
Which side will come out on top tonight❓ 🤔 🤔 pic.twitter.com/F8DWmyRZs4
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.