கோலி செம ஹாப்பி... முதல் போட்டியே வெற்றி!

விராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.

தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், கோலி மற்றும் ரஹானேவின் அசத்தலான ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வரும் இந்திய அணி, அங்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நேற்று நடைப்பெற்ற முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்பு ஆடிய கிறிஸ் மோரிஸ் (37), டி காக் (34) ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின்பு, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட்களை இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, தவான் ஆகியோர் முதலில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பின்பு, பேட்டிங்கில் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 33 ஆவது சதத்தை நேற்று நிறைவு செய்தார்.

அவருடன், கைக்கோர்த்த ரஹானே, 79 ரன்களை குவித்தார். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் கலக்கிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய விராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.

×Close
×Close