விவசாயியாக மாறி ஏழைகளுக்கு உதவுவேன்! அஸ்வினிடம் எதிர்கால திட்டம் பற்றி பேசிய ஹர்பஜன்…

நமக்கு தேவையான ஒன்று அன்பும் அரவணைப்பும் தான். இதைத் தான் கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது - ஹர்பஜன் சிங்

By: May 6, 2020, 12:24:17 PM

Reminisce With Ash Harbhajan Singh wants to become farmer : கொரோனா வைரஸால் லாக்டவுனில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் தங்களின் வாழ்நாளில் எதிர்பார்த்திராத லாக்டவுனை அனுபவித்து வருகின்றோம். இதே சூழலில் பலரும், தங்களின் எதிர்காலம் குறித்த திட்டத்தை பற்றி யோசித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்ஸ்டாகிராமில் பயங்கர பிஸியாக இருக்கிறார். Reminisce With Ash என்று தொடர் ஐ.ஜி. லைவில் தன்னுடைய விளையாட்டுத் துறை அனுபவம் குறித்து பேசி வருகிறார். 4ம் தேதி, ஹர்பஜன் சிங்கோடு நடத்திய உரையாடலில் ஹர்பஜன் சிங் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க : புலிட்சர் விருதினை பெற்ற 3 ஜம்மு – காஷ்மீர் புகைப்பட பத்திரிக்கையாளர்கள்!

கொரோனா முடிவுற்ற பிறகு, விவசாயியாக மாறி, உணவு பயிரிடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் விளைந்து வரும் பயிர்களை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவ இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மேலும், வீட்டில் இருக்கும் நபர்களுக்கு நேரம் செலவிடாமல் ஓடிக் கொண்டிருந்தோம். பணத்தை தேடி ஓடினோம். பேராசையுடன் வாழ ஆசைப்பட்டோம். ஆனால் கொரோனா ஒன்று வந்து, பணம் மட்டுமே முக்கியம் இல்லை என்ற பாடத்தை அனைவருக்கும் உணர்த்தியது.

மேலும் படிக்க : டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு… அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு!

நான் சம்பாதித்த பணத்தை என் வாழ்நாள் முழுவதும் செலவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு பணம் தற்போது தேவையில்லை. நமக்கு தேவையான ஒன்று அன்பும் அரவணைப்பும் தான். இதைத் தான் கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பணத்தை தேடி அலைந்தது போதும் என்று கருதுவதாகவும் அவர் அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Reminisce with ash harbhajan singh wants to become farmer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X