193 ரன்களில் அவுட்: பாக். பேட்ஸ்மேனை தந்திரத்தில் வீழ்த்திய குயின்டன் டி காக்; இது நியாயமா?

Fakhar Zaman run out on 193 after ‘fake fielding’ by Quinton de Kock Tamil News: ஆட்டத்தின் இறுதி வரை மிகத் துடிப்புடன் விளையாடிய 193 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான், விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கின் தந்திரத்தால் 50 வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.

ricket news in tamil Fakhar Zaman run out on 193 after ‘fake fielding’ by Quinton de Kock

Cricket news in tamil: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. எனவே தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 341 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இருப்பினும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஃபக்கர் ஜமான் 155 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 18 பவுண்டரிகளை பறக்க விட்டு 193 ரன்கள் சேர்த்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை மிகத் துடிப்புடன் விளையாடிய ஜமான், தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கின் தந்திரத்தால், 50 வது ஓவரில் ரன் அவுட் ஆனார். டி கோக் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி என்ஜிடியை நோக்கி விரல் காட்டவே, 2வது ஓட்டத்தின் முடிவில் தனது வேகத்தை குறைத்துக்கொண்ட ஜமான், டி கோக் தன்னைத்தான் எதோ சொல்கிறார் என்று பின்னே திரும்பி பார்த்தார். இதற்கிடையில் அங்கு நின்றிருந்த ஃபீல்டர் எய்டன் மார்க்ராம் பந்தை கீப்பர் டி கோக்கை நோக்கி வீசினார். அதை லாவகமாக பிடித்த டி கோக், ஜமான் கிரீஸ் கோட்டை தொடுவதற்குள் ஸ்டம்ப் அவுட் செய்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக் ஃபக்கர் ஜமானை அவுட் செய்த முறை சரிதானா என்று இணைய வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போலி ஃபீல்டிங்’ என்பது ஒரு ஃபீல்டர் தனது உடல் உறுப்புகளில் சிலவற்றை அசைக்கும்போது, ​​அது பேட்ஸ்மேன்களை தவறு செய்வதில் குழப்பமடையச் செய்யும் செயலாகும்

சர்வதேச கிரிக்கெட் விதி 41.5.1 இன் படி, “ஸ்ட்ரைக்கர் பந்தைப் பெற்ற பிறகு பேட்ஸ்மேனை திசை திருப்பவோ, ஏமாற்றவோ அல்லது தடுக்கவோ, எந்தவொரு ஃபீல்டரும் வேண்டுமென்றே, வார்த்தை அல்லது செயலால் முயற்சிப்பது நியாயமற்றது.”

“இது நான் கண்ட மிகச் சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாகும். ஜமான் மிகச்சரியாக விளையாடினர். துரதிர்ஷ்டவசமாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அவரை வாழ்த்துகிறேன். அவரது ஆட்டத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். அவர் அங்கு இருந்தவரை, எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. யாராவது அவருடன் நின்றிருந்தால், நாங்கள் விளையாட்டை வென்றிருக்கலாம். இறுதியில் ஃபக்கார் அவர் மீது அதிக அழுத்தம் கொடுத்தார்”என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் போட்டிக்கு பின்னர் நடந்த நேர்காணலில் கூறினார்.

“நாங்கள் இந்த போட்டியை வென்றிருந்தால், இது ஒரு சிறந்த இன்னிங்ஸாக அமைந்திருக்கும்”என்று ஆட்ட நாயகன் ஜமான் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்ய ஜமான் டேவிட் வார்னரை (2016 இல் கேப்டவுனில் 173) விஞ்சியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ricket news in tamil fakhar zaman run out on 193 after fake fielding by quinton de kock

Next Story
கேட்கவே சந்தோஷமா இருக்கு: சாராய விளம்பரத்தை மறுத்த வீரர்… ஜெர்சியை மாற்றிய சிஎஸ்கே!IPL 2021, Moyeen Ali objects to wear liquor brand logo, CSK jersey, ஐபிஎல் 2021, csk franchise removes liquor brand logo, moyeen ali, மொயீன் அலி, சிஎஸ்கே, moyeen ali england, ipl, chennai super kings, moyeen ali, england, மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்தின் பிராண்ட் லோகோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com