Advertisment

'களத்தில் கூல், மேட்ச் வின்னிங் திறன்': தோனியுடன் ஸ்டோக்ஸை ஒப்பிடும் ஆஸி,. ஜாம்பவான் வீரர்

பென் ஸ்டோக்ஸின் மேட்ச் வின்னிங் திறன்களையும், அவரின் ஆன்-ஃபீல்ட் நடத்தையையும் இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியுடன் ஒப்பிட்டுள்ளார் ரிக்கி பாண்டிங்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ricky Ponting Ben Stokes MS Dhoni Tamil News

தோனியைப் போலவே அழுத்தமான சூழ்நிலைகளில், சமகால கேப்டன்களை ஸ்டோக்ஸ் மிகவும் முன்னால் இருக்கிறார் என்றும் ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

Ricky Ponting on Ben Stokes MS Dhoni Tamil News: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அந்த 2 போட்டியில்லும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது. அடுத்ததாக இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நாளை முதல் (6ம் தேதி) தொடங்க உள்ளது.

Advertisment

லார்ட்ஸில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். 214 பந்துகளில் 155 ரன்களை குவித்த ஸ்டோக்ஸ் கிட்டத்தட்ட தனியொருவரனாய் இங்கிலாந்து அணியை தொடரை சமன் செய்யும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், அவரது போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இப்படியாக, ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவை பயமுறுத்துவது இது முதல் முறை அல்ல. 2019 ஆஷஸ் தொடரில் அவர் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை அடித்து லீட்ஸ் மைதானத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விக்கெட் வெற்றியைப் பதிவு செய்ய இங்கிலாந்து அணிக்கு உதவி இருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங், பென் ஸ்டோக்ஸின் மேட்ச் வின்னிங் திறன்களையும், அவரின் ஆன்-ஃபீல்ட் நடத்தையையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டுள்ளார். மேலும், தோனியைப் போலவே அழுத்தமான சூழ்நிலைகளில், சமகால கேப்டன்களை ஸ்டோக்ஸ் மிகவும் முன்னால் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"எந்தவொரு சர்வதேச வீரரும் எந்த நேரத்திலும் அவர்கள் விளையாடுவதற்கு மைதானத்திற்குள் செல்லும் போது அழுத்தத்தில் இருப்பார்கள். ஆனால் பென் மிடில் ஆர்டரில் அல்லது லோ-ஆர்டரில் பேட்டிங் செய்வது, மற்ற வீரர்களை விட அதிக வெற்றி வாய்ப்பு சூழ்நிலைகளில் தன்னைக் காண்கிறார.

அவரது இந்த செயல்களால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது தோனியைப் போன்ற ஒருவர் தான். அவர் நிறைய டி20 ஆட்டங்களில் கடைசி கட்டத்தில் விளையாடியிருக்கிறார. மற்றும் கேம்களை முடித்திருக்கிறார். அதேசமயம் டெஸ்ட் போட்டிகளின் முடிவில் பென் அதைச் செய்கிறார். விளையாட்டின் வரலாற்றில் பல வீரர்கள் அந்த வகையான ரோலில் தங்களைக் கண்டறிந்துள்ளனர். இறுதியில் வெற்றிகரமான கேம்களில் உள்ளனர். குறிப்பாக ஒரு கேப்டனாக.

அவர் அதை மீண்டும் செய்ய முடியும் என்று எல்லோருடனும் சேர்ந்து நானும் நினைத்தேன். ஏனென்றால் இதுபோன்று நடந்ததை நாம் முன்பே பார்த்திருக்கிறோம் (2019ல்). ஆனால் இது அவர்கள் சேஸிங் செய்வதற்கு சற்று அதிகமான ரன்களாக இருந்தது.

எல்லோருடைய மனதிலும் பின்தங்கிய நிலையில், அது எப்படி இருந்ததோ, 2019ல் ஹெடிங்லிக்கு எத்தனை ஒற்றுமைகள் இருந்தன என்பதை வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன், ஸ்டீவ் ஸ்மித் அவரை வீழ்த்தினார். மேலும் ஹெடிங்லியில் மார்கஸ் ஹாரிஸால் அவர் 116ல் வீழ்த்தப்பட்டார். அதனால் கடந்த கால நினைவுகள் மீண்டும் வெளியே வந்துகொண்டே உள்ளன." என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ் தோனி வழிநடத்தி வரும் நிலையில், அந்த அணியில் முக்கிய வீரராகவும் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு 2 ஆண்டுகள் தடை வழங்கப்பட்ட போது, 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் தோனியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை ஸ்டோக்ஸ் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பித்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ms Dhoni Ricky Ponting Ben Stokes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment