ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக புஷ்பையர்(Bushfire) காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தியது. குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிவாரணம் ஈட்டுவதற்காக புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் காட்சி போட்டியை நடத்த திட்டமிட்டனர்.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இதில் விளையாடுகின்றன. இந்த போட்டி நாளை மறுநாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி : அதிலும் அந்த ரன் அவுட் பிரமாதம்
ஆனால், பிக் பேஷ் டி20 லீக்கின் இறுதிப் போட்டி சிட்னியில் 8-ம் தேதி நடைபெற உள்ளதால், மெல்போர்னுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…
இந்நிலையில், ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டரில் இரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒன்றில் பந்து வீசும் இயந்திரத்துடன் பாண்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
Just like riding a bike. A very slow bike. pic.twitter.com/Ba6dnHIBzO
— Ricky Ponting AO (@RickyPonting) February 6, 2020
இரண்டாவது வீடியோவில், லாரா பயிற்சி செய்யும் வீடியோ இடம் பெற்றுள்ளது.
If I’m batting three on Sunday, hopefully this guy is on my team and batting four @brianlara pic.twitter.com/dsaXhJTLoU
— Ricky Ponting AO (@RickyPonting) February 6, 2020
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாண்டிங் லெவன் அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார். மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கிரேட் கோர்ட்னி வால்ஷ், கில்கிறிஸ்ட் லெவன் அணியின் பயிற்சியாளராக இருப்பார்.
இந்த கண்காட்சி போட்டியில் இரு அணிகளும் தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும். ஐந்து ஓவர் பவர் பிளே, பந்துவீச்சு கட்டுப்பாடுகள் இல்லை. பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் முதல் பந்தில் அவுட் கிடையாது. பந்து வீச்சாளர்களுக்கு வரம்புகள் இருக்காது. பீல்டர்கள் தேவைப்படும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
புஷ்ஃபைர் கிரிக்கெட் பேஷ் தொடரில் விளையாடும் வீரர்கள்:
ரிக்கி பாண்டிங் (c), ஆடம் கில்கிறிஸ்ட் (c), பிரையன் லாரா, யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், ஜஸ்டின் லாங்கர், மேத்யூ ஹைடன், ஷேன் வாட்சன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், பிராட் ஹாடின், பிரட் லீ, அலெக்ஸ் பிளாக்வெல், டான் கிறிஸ்டியன், நிக் ரிவோல்ட், எலிஸ் வில்லானி, லூக் ஹாட்ஜ், கேம் ஸ்மித்.