இன்று வரை 90’ஸ் கிட்ஸ் மத்தியில் தீராத பல சந்தேகங்களில் ஒன்று பாண்டிங் பேட்டில் ஸ்ப்ரிங் இருந்துச்சா இல்லையா என்பதே.
என்ன புரியலையா…
சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு 2003ம் ஆண்டு நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கா?? ஆங்… அதேதான்…
உன் வருகை நம்பிக்கையின் துவக்கமாக இருக்கட்டும் – குட்டி ரெய்னாவினை வரவேற்ற தந்தை!
அந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஈவு இரக்கமின்றி இந்திய பவுலர்கள் ஸ்ரீநாத், நெஹ்ரா, ஜாஹீர், ஹர்பஜன் என அடித்து நொறுக்கி 359 ரன்களை குவித்தது.
360 எனும் மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, சச்சினை முதல் ஓவரிலேயே இழக்க… (கண்கள் கலங்குது ப்ரோ… விட்டுடுங்க) 234 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
பாத்ரூம்-ல என்னய்யா சேலஞ் வேண்டி கெடக்கு? (வீடியோ)
போட்டி முடிந்த சில நாட்களில், ‘ரிக்கி பாண்டிங் பேட்டில் ‘ஸ்ப்ரிங்’ வைத்து ஆடியதாகவும், இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நடக்க உள்ளதாக ஏதோ ஒரு புண்ணியவான் புரளியை கிளப்பிவிட, பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் இல்லாத காலத்திலயே காட்டுத்தீயாய் பரவிய அந்த வதந்தியை உண்மை என நம்பிய தலைமுறையானது 90’ஸ் கிட்ஸ் தலைமுறை.
இந்நிலையில், அப்போட்டியில் தான் பயன்படுத்திய பேட்டின் புகைப்படங்களை ரிக்கி பாண்டிங் வெளியிட்டிருக்கிறார்.
Given we’ve all got a bit of time on our hands as we stay at home, thought I’d go through what I’ve kept from my career and share some of it with everyone on a regular basis – this is the bat I used in the 2003 World Cup final. pic.twitter.com/meoBP6NJvg
— Ricky Ponting AO (@RickyPonting) March 23, 2020
இன்னமும் அந்த வதந்தியை மறக்காத ரசிகர்கள், பேட்டில் ஸ்ப்ரிங் இருந்துச்சா, இல்லையா? இப்போவாவது சொல்லுங்க என்று பாண்டிங்கிடமே அப்பாவியாய் கேட்டு வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Ricky ponting shares photo of world cup 2003 final bat
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்