Advertisment

இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான 2வது போட்டி: 'இந்திய ஏ' அணியில் இடம் பிடித்த அதிரடி வீரர்

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 நாட்கள் கொண்ட 4 பயிற்சி போட்டிகள் தொடரில் 2வது போட்டிக்கான இந்திய ஏ அணியில் அதிரடி வீரரான ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rinku Singh added to India A squad for 2nd four-day match against England Lions Tamil News

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்திய டெஸ்ட் அணியில் ரிசர்வ் வீரராக ரிங்கு இருந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rinku Singh: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற நாளை மறுநாள் வியாழக்கிழமை (25ம் தேதி) முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 நாட்கள் கொண்ட 4 பயிற்சி போட்டிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்திய மண்ணில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் சில முக்கிய இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகின்றனர்.

இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய ஏ அணியில் அதிரடி வீரரான ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

“ஜனவரி 24 முதல் அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியில் ரிங்கு சிங்கை ஆடவர் அணி தேர்வுக் குழு சேர்த்துள்ளது." என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ரிங்கு சிங் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடிய வருகிறார். இதுவரை 43 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 58.47 சராசரியில் 3099 ரன்கள் எடுத்துள்ளார். 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்திய டெஸ்ட் அணியில் ரிசர்வ் வீரராக ரிங்கு இருந்தார். முன்பு தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்ட ரிங்கு செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டின் போது இந்திய டக்-அவுட்டில் இருந்து மாற்று வீரராக களத்தில் இறங்கினார். 

விரைவில் டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா ரிங்கு?

விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அதனால் மிடில் ஆர்டரில் மாற்று வீரராக அவரை தேர்வாளர்கள் எதிர்பார்க்கலாம். ரிங்கு டி20 போட்டிகளில் ஏற்கனவே தனக்கென பெயரை சம்பாதித்துள்ள நிலையில், அவரது முதல் தர போட்டிகளின் ரன்களும் சிறப்பாக உள்ளன. அத்துடன் இடது கை வீரராகவும், அவர் தனது மாநில அணிக்காக ஐந்து அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்வதால், அவருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

இருப்பினும், தேர்வுக் குழு இன்னும் கோலிக்கான மாற்று வீரரை குறிப்பிடவில்லை. இரண்டு ஹெவிவெயிட் இந்தியா 'ஏ' வீரர்கள் - மத்தியப் பிரதேசத்தின் ரஜத் படிதர் மற்றும் மும்பையின் சர்பராஸ் கான் - கோலிக்கு பதிலாக முன்னணியில் உள்ளனர்.

ஒரு புதிய முகம் தேவைப்பட்டால், தற்போது நல்ல ஃபார்மில் இருந்து வரும் மத்தியப் பிரதேசத்தின் ரஜத் படிதார் தேர்வாகலாம். அவர் ஏற்கனவே இந்தியாவுக்காக தனது ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காக அவர் 151 ரன்கள் எடுத்து இருந்தார். அதற்கு சற்று முன்பு, அதே எதிரணிகளுக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் பாடிதர் 111 ரன்களை எடுத்திருந்தார். 30 வயதான அவர் 2021-22 ரஞ்சி டிராபியை அவரது மாநில அணி வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார், அங்கு அவர் மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அடித்தார்.

இதேபோல், மும்பை வீரரான சர்ஃபராஸ் கானின் பெயரும் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. ஆனால், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு எதிரான அவரது திறமை ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், சுழலுக்கு எதிரான அவரது திறன் மிடில் ஆர்டரில் டர்னிங் ஆடுகளங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். மேலும் தேர்வாளர்கள் யாராவது முயற்சி செய்து நம்பினால் அவர் ஒரு விருப்பமாக இருக்கலாம்.

2வது போட்டிக்கான இந்திய 'ஏ' அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்பராஸ் கான், திலக் வர்மா, குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார், அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, உபேந்திரா. யாதவ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள், ரிங்கு சிங்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rinku Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment