Advertisment

ஹவுஸ் கிளீனிங் டூ 5 பந்தில் 5 சிக்ஸர் வரை… ரிங்கு சிங்கின் ஐ.பி.எல் பயணம்!

டெல்லியில் நடந்த ஒரு போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற ரிங்கு சிங்கிற்கு பைக் (மோட்டார் சைக்கிள்) பரிசளிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Rinku Singh: From giving up broomstick to smashing 5 sixes to win it for KKR Tamil News

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் ஸ்டேடியம் அருகே உள்ள ஒரு எல்.பி.ஜி கேஸ் டெலிவரி விநியோக நிறுவனத்தின் குவாட்டர்சில் சிறிய 2 அறைகள் கொண்ட வீடு அந்த நகரில் பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது நடந்து ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று த்ரில் வெற்றியை ருசித்தது. கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த "ரிங்கு சிங்" யாஷ் தயாளின் ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் பிறந்த வீடு தான் இன்று கிரிக்கெட் உலகின் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

Advertisment

நேற்று ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் ஹீரோவாக வலம் வந்த ரிங்கு சிங் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை கான்சந்திரா அலிகார் நகரில் உள்ள வீடுகளுக்கு எல்.பி.ஜி சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகிறார். அவருடன் 5 உடன்பிறந்தவர்களில் அவர் 3வது பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் ஆட்டோரிக்ஷா ஓட்டுகிறார். மற்றொரு சகோதரர் பயிற்சி மையத்தில் வேலை செய்கிறார்.

இதையும் படியுங்கள்: கடன் சுமை, வீடு துடைக்கும் பணி… கொல்கத்தா வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங் பின்னணி என்ன?

ரிங்குவின் கதையும் மற்ற வீரர்களைப் போலத் தான் - "ஐ.பி.எல் கனவு" - நாம் அவ்வப்போது கேட்கும் கந்தல் டூ ரிச் கதை தான் இது. 2022 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஆல்ரவுண்டர் வீரரான ரிங்கு சிங்குவை வசப்படுத்த மும்பை இந்தியன்ஸ் போர் நடத்தியது கொல்கத்தா. கடைசியில் அவரை ரூ 80 லட்சத்திற்கு வாங்கியது. அவரை வாங்க 2 பெரிய அணிகள் அவருக்காக போட்டியிட்டபோது, ​​​​ரிங்கு தனது வீட்டில், டி.வி-யில் நேரலையில், தனது கனவு நனவாவதைப் பார்த்தார்.

"எனக்கு 20 லட்சம் தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் 80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டேன். இப்போது, எனது பெரிய அண்ணனின் திருமணத்திற்கு என்னால் பங்களிக்க முடியும். என் சகோதரியின் திருமணத்திற்கும் ஏதாவது சேமிக்கலாம் என்பதுதான் மனதில் தோன்றிய முதல் எண்ணம்.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ரிங்கு சிங் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன், ரிங்குவின் குடும்பம், ஐந்து லட்சம் ரூபாய் கடனில் சிக்கி, திருப்பி செலுத்த முடியாமல் தவித்தது. இது குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவர்களின் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. மேலும் ரிங்கு கல்வியில் நன்றாக இல்லை. 9ம் வகுப்பில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அவருக்கு கிரிக்கெட்டில் மட்டுமே வாய்ப்பு உள்ளது என்பது அவருக்குத் தெரிந்து இருந்தது.

publive-image

உத்தரப்பிரதேச 19 வயதுக்குட்பட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது கிடைத்த தினசரி செலவு பணத்தையும், கிரிக்கெட்டில் இருந்து மற்ற பிரதிநிதித்துவ பணத்தையும் அவர் சேமித்து வைத்தார். அதைக் கொண்டு கடனை அடைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்து இருந்தார். ஆனால், அவரால் ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க முடிவில்லை.

"மூத்த அண்ணனைப் போலவே தந்தையும் மாதம் 6-7 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். எனது குடும்பம் கொஞ்சம் பெரியது, கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. போராட்டம் நிறைந்தது தான் எனது வாழ்க்கை. அந்த கஷ்டங்களுக்கு கடவுள் திருப்பிச் செலுத்துகிறார், ”என்று அவர் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: கடன் சுமை, வீடு துடைக்கும் பணி… கொல்கத்தா வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங் பின்னணி என்ன?

டெல்லியில் நடந்த ஒரு போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற அவருக்கு பைக் (மோட்டார் சைக்கிள்) பரிசளிக்கப்பட்டது. அதைப் பார்த்ததும், ரிங்குவின் குடும்பத்தினரும் அவரை நம்பத் தொடங்கினர். அந்த பைக் மூலம் அவரது தந்தை அலிகார் முழுவதும் சிலிண்டர்களை டெலிவரி செய்ய தொடங்கினார்.

publive-image

அதன் பிறகு ஒரே இரவில் விஷயங்கள் மாறிவிட்டன என்று இல்லை. ஒருமுறை அவர் தனது சகோதரரிடம் வேலை தேட உதவுமாறு கேட்டார். "அவர் என்னை ஒரு வீட்டுப் பணியாளராக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது துடைத்தல் வேலை. வீட்டுக்கு வந்து அம்மாவிடம், ‘இனி நான் போக மாட்டேன். கிரிக்கெட்டில் எனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கிறேன்.' என்று சொன்னேன்.

ரிங்கு உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், அவர் கவனிக்கப்பட்டார். 2021ல், பஞ்சாப் கிங்ஸ் அவரை அணியில் சேர்த்தது. ஆனால் அவர் பெஞ்சை சூடேற்றி கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அவரை தேர்வு சோதனைக்கு அழைத்தபோது அதிர்ஷ்டம் மீண்டும் திரும்பியது, அங்கு அவர் 31 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.

"அந்த ஆட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன். எனது உள்நாட்டு சீசன் நன்றாகப் போய்விட்டது, யாராவது என்னை அழைத்துச் செல்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு பெரிய பணத்திற்கு நான் செல்வேன் என்று நினைக்கவில்லை. என் வம்சத்தில் யாரும் இவ்வளவு பணத்தைப் பார்த்ததில்லை” என்று கூறியிருந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3:30 மணிக்கு நடந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 53 ரன்களும், விஜய் சங்கர் 63 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 205 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் வெங்கடேச ஐயர் அதிரடியாக விளையானார். அரைசதம் அடித்த அவர் 83 ரன்னில் ஆட்டமிழந்தார். இது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இந்த தருணத்தில் பந்துவீசிய ரஷித் கான் 17வது ஓவரில் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இது கொல்கத்தாவுக்கு மேலும் பின்னடைவை தந்தது.

இதையும் படியுங்கள்: கடன் சுமை, வீடு துடைக்கும் பணி… கொல்கத்தா வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங் பின்னணி என்ன?

இந்த இக்கட்டான சூழலில் களத்தில் இருந்த ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 21 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அசத்தினார். அவர் சிக்ஸர் பறக்கவிட்ட வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த அதிரடி ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ரிங்கு சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று இருந்தார். அப்போதும் ரிங்கு சிங் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பித்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Gujarat Titans Kolkata Knight Riders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment