ஆல்ரவுண்டர் திறன் இல்லை... டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை ஏன்?

களத்திற்குள் பேட்டிங் ஆட தொடங்கும் முன் ஒரு சில பந்துகளை சாப்பிட விரும்பும் சில வீரர்களைப் போலல்லாமல், களம் புகுந்த உடனேயே அதிரடி சரவெடி காட்டும் வீரராக ரிங்கு சிங் இருக்கிறார்.

களத்திற்குள் பேட்டிங் ஆட தொடங்கும் முன் ஒரு சில பந்துகளை சாப்பிட விரும்பும் சில வீரர்களைப் போலல்லாமல், களம் புகுந்த உடனேயே அதிரடி சரவெடி காட்டும் வீரராக ரிங்கு சிங் இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Rinku Singh missing India T20 World Cup squad explained in tamil

வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக மட்டையைச் சுழற்றக் கூடியவராகவும் இருக்கிறார் ரிங்கு சிங்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

வெங்கடகிருஷ்ண பி - Venkata Krishna B

T20 World Cup 2024 | Rinku Singh | Indian Cricket Team:20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை  20 அணிகளும் இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்தது.

Advertisment

இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி உட்பட நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 15 வீரர்களுடன் 3 பேர் கொண்ட காத்திருப்பு பட்டியலும் (ரிசர்வ்) வெளியிட்டப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வெளியிட்ட இந்த அறிவிப்பில் சில முடிவுகள் ஆச்சரியத்தை அளித்தன. குறிப்பாக, இந்திய டி20 அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அணி நிர்வாகத்தின் இந்த முடிவு பலரது புருவங்களை உயர்த்தும் நிலையில், அதிரடி வீரர் ரிங்கு சிங் காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த முடிவுக்கு என்ன வழிவகுத்தது என்பதை இங்கு விவரமாக பார்க்கலாம். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: This is why Rinku Singh missed out on T20 World Cup spot

ரிங்கு ஏன் இல்லை?

Advertisment
Advertisements

கடந்த ஆண்டு ஐ.பி.எல்-லில் அதிரடி காட்டி ஜொலித்த இடது கை ஆட்டக்காரர் ரிங்கு சிங், இந்தியாவின் ஒயிட்-பால் அணிகளில் ஒருங்கிணைந்த வீரராக இருந்து வருகிறார். அணி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தால் அல்லது ஃபினிஷர் ரோலில் அல்லது அழுத்தத்தை சமாளித்து எதிர் தாக்குதல் தொடுப்பது என எல்லா வகைகளிலும் தனது திறனை நிரூபித்துள்ளார் ரிங்கு. மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக மட்டையைச் சுழற்றக் கூடியவராகவும் இருக்கிறார். 

களத்திற்குள் பேட்டிங் ஆட தொடங்கும் முன் ஒரு சில பந்துகளை சாப்பிட விரும்பும் சில வீரர்களைப் போலல்லாமல், களம் புகுந்த உடனேயே அதிரடி சரவெடி காட்டும் வீரராக ரிங்கு சிங் இருக்கிறார். இவை அனைத்தும் அவருக்கு அணியில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் இந்திய நிர்வாகம் அதிக ஆல்-ரவுண்டர்களைக் கொண்ட அணியாக இருக்க வேண்டும் என விரும்பியுள்ளது. இதனால், இறுதி இடத்திற்கு ரிங்கு சிங், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடையே நிலவிய மும்முனை போட்டியில், இறுதியில் அக்சரின் ஆல்ரவுண்ட் திறன்கள் மற்றும் அவரின் சமீபத்திய ஃபார்ம் காரணமாக அவரை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்துள்ளனர். 

ஆல்ரவுண்டர் ரோலில் சமீப காலமாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என அனைவரும் போராடி வரும் நிலையில், உலகக் கோப்பையில் ஃபினிஷர் ரோலை கையில் எடுக்கப் போவது யார்? என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும். விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் இதைச் செய்ய வேண்டும். இவை தவிர, பதிலளிக்கப்படாத கேள்வி ஒன்றும் உள்ளது. அதாவது, ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே அணியில் இருக்கும்போது, அதே பாணியில் செயல்படும் அக்சர் படேல் 15 பேர் கொண்ட அணியில் இருப்பது அவசியமா? என்பது தான். எவ்வாறாயினும், ஆடும் லெவன் அணியில் இருவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அணியில் ஏன் நான்கு ஸ்பின்னர்கள்?

பலரும் எதிர்பார்க்காத ஒரு கூக்லி பந்துவீச்சு அது. 5 மாதங்களுக்கு முன்பு டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த ரவி பிஷ்னோயை விட சாஹல் முன்னேறி இருக்கிறார் (தற்போது அவர் 6-வது இடத்தில் உள்ளார்) என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், நடப்பு ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முன்னணியில் சாஹல் இருப்பதால், அதை வைத்தும், அவரது ஃபார்மை மனதில் கொண்டும் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். 

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடைசி டி20 உலகக் கோப்பையில், அனைத்து அணிகளும் லெக் ஸ்பின்னர்களுடன் விளையாடியபோது, ​​சாஹல் எல்லா போட்டிகளிலும் பெஞ்சில் அமர்த்தப்பட்டார்.  அமெரிக்காவிலும் கரீபியனிலும் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதை கணிப்பது கடினம். அவரை விட குல்தீப் யாதவ் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். 

மேலும், இந்தியாவின் நீண்ட பேட்டிங் வரிசை எவ்வளவு மோசமாகத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, ஜடேஜா மற்றும் அக்சரில் ஒருவர் லெவன் அணியில் இடம் பெறுவர். நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதுதான் சரியான வழி என்று இந்தியா நம்பினால், இருவரும் அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது, பந்தை தாக்குவதற்கு பதிலாக, ஜடேஜா மற்றும் அக்சர் இருவரையும் மாடலில் பொருத்தி டிபென்ஸ் செய்யச் சொல்வார்கள். ஐ.பி.எல்-லில், இது பேட்ஸ்மேன் vs பேட்ஸ்மேன் போட்டியாக மாறியுள்ளது, மேலும் உலகக் கோப்பையிலும் இந்தியா இதையே எதிர்பார்க்கிறது.

ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாததால் 15 பேர் கொண்ட அணியில் வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் இந்த சீசனில் இரண்டு ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடியதால், அவரை அணியில் சேர்க்கும் முடிவில் இருந்து தேர்வாளர்கள் பின்வாங்கியுள்ளனர். மேலும், பவர்பிளே ஓவர்களில் அவர் பந்துவீச முடியும் என்பதால், அவர் ஏன் அந்த ரோலில் வளர்க்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதற்கு மாறாக, எல்லோராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அக்சர்.

தமிழில் - ச. மார்ட்டின் ஜெயராஜ். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Indian Cricket Team Rinku Singh T20 World Cup 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: