scorecardresearch

‘நெற்றியில் வெட்டுக் காயம், முதுகில் சிராய்ப்பு’: பண்ட் கார் விபத்து குறித்து பி.சி.சி.ஐ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ள நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Rishabh Pant accident: BMW car hits with divider, severely injured Tamil News
Photos of Rishabh Pant's car accident have surfaced on social media. (Twitter/ https://twitter.com/abhishereporter)

Rishabh Pant accident Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளார். அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அவரது கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது. பிறகு பண்ட் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், பண்ட் தனது பிஎம்டபிள்யூ காரை நர்சன் எல்லையில் டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. விபத்தின் போது ரிஷப் பண்ட் மட்டும் காரில் இருந்ததால், தப்பிக்க ஜன்னலை உடைத்துள்ளார்.மேலும், ஓட்டும் போது தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக பண்ட் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: தூக்கத்தில் அசந்த பண்ட்… தூக்கி எறியப்பட்ட கார்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

பண்ட்டின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மேக்ஸ் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுஷில் நகர் தெரிவித்துள்ளார்.

‘ரிஷப் சென்ற கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. மிகவும் சிரமப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில், விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பந்த் டெல்லி சாலையில் உள்ள சக்ஷாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.’ என்று விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

பண்ட் கார் விபத்து குறித்து பிசிசிஐ அறிக்கை

இந்நிலையில், ரிஷப் பண்ட் காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பண்ட்டின் நெற்றியில் இரண்டு வெட்டுக் காயங்கள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது, வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலில் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொடரில் பண்ட் இல்லை

வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டார். பிசிசிஐ செய்திக்குறிப்பில் பந்த் காயமடைந்தாரா, ஓய்வெடுத்தாரா அல்லது கைவிடப்பட்டாரா என்பதை குறிப்பிடவில்லை. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்ததால், அவர் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

இதையும் படியுங்கள்: தூக்கத்தில் அசந்த பண்ட்… தூக்கி எறியப்பட்ட கார்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rishabh pant accident bmw car hits with divider severely injured tamil news