அயல்நாட்டு டெஸ்ட்டில் 6 சதம்... ஒன்றில் கூட இந்தியா வெற்றி இல்லை; பண்ட்டை துரத்தும் சாபம்!

இந்தியா தோல்வியுற்றதால் ரிஷப் பண்ட்டின் இரட்டை சதங்கள் வீணானது. அத்துடன், வெளிநாட்டு போட்டிகளில் பண்ட் சதம் அடித்த போதெல்லாம், அந்தப் போட்டிகளில் இந்தியா வெல்லவில்லை என்கிற சாபம் தொடர்கிறது.

இந்தியா தோல்வியுற்றதால் ரிஷப் பண்ட்டின் இரட்டை சதங்கள் வீணானது. அத்துடன், வெளிநாட்டு போட்டிகளில் பண்ட் சதம் அடித்த போதெல்லாம், அந்தப் போட்டிகளில் இந்தியா வெல்லவில்லை என்கிற சாபம் தொடர்கிறது.

author-image
WebDesk
New Update
Rishabh Pant century curse overseas Test continues Tamil News

சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் ரிஷப் பண்ட் சதம் விளாசியது போது, இந்தியா ஆடிய போட்டிகள் தோல்வி அல்லது டிராவில் முடிந்திருக்கின்றன.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

Advertisment

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய விக்கெட் கீப்பர் வீரரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட், முதல் இன்னிங்சில் 178 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் சதம் விளாசி 134 ரன்கள் எடுத்து அசத்தினார். இதேபோல், 2-வது இன்னிங்சிலும் சதம் அடித்து மிரட்டிய அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் எடுத்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

சாதனை  

Advertisment
Advertisements

பண்ட் முதல் இன்னிங்சில் 65 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (76) 3,000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை அவர் முறியடித்தார். 

தொடர்ந்து அவர் சதம் அடித்தது மூலம் தனது ஏழாவது டெஸ்ட் சதம் மற்றும் வெளிநாட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி 6 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தோனியின் அந்த வாழ்நாள் சாதனையை தகர்த்து பண்ட் புதிய வரலாறு படைத்தார். 

தவிர, மொத்தமாக 9 சிக்ஸர்களை பறக்க விட்டதன் மூலம் பண்ட், இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன், டெஸ்ட் வரலாற்றில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃப்ளவர்,  2001 ஆம் ஆண்டு ஹராரேவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 142 மற்றும் 199* ரன்கள் எடுத்திருந்தார். 

சாபம் 

இருப்பினும், இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதால் ரிஷப் பண்ட்டின் இரட்டை சதங்கள் வீணானது. அத்துடன், வெளிநாட்டு போட்டிகளில் பண்ட் சதம் அடித்த போதெல்லாம், அந்தப் போட்டிகளில் இந்தியா வெல்லவில்லை என்கிற சாபம் தொடர்கிறது. அவரது முதல் டெஸ்ட் சதத்தை, 2018 இல் லண்டனில் உள்ள ஓவலில் அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக விளாசினார். அந்தப் போட்டியில் இந்தியா 450+ என்ற இலக்கைத் துரத்தும்போது, 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த ஆட்டமிழக்காத 159 ரன்கள் இந்தியாவை காப்பாற்றவும் டெஸ்டை டிரா செய்யவும் உதவியது. ஆனால், அதன் பிறகு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூஸ்லேண்ட்ஸிலும், 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் சதம் அடித்தபோது, இந்தியா தோல்வியைத் தழுவியது. வெளிநாட்டில் தான் இப்படி என்றால், சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் அவர் சதம் விளாசியது போது இந்தியா ஆடிய போட்டிகள் தோல்வி அல்லது டிராவில் முடிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Rishabh Pant

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: