IPL 2024 | Delhi Capitals | Rishabh Pant: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 07) டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்லோ -ஓவர் ரேட் காரணமாக டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு ஒரு போட்டியில் ஆட தடையும், ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஸ்லோ -ஓவர் ரேட் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு 3 வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 12 ஆம் தேதி) பெங்களூருக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஐ.பி.எல் நடத்தை விதி 8-ன் படி, டெல்லி கேபிடல்ஸ் மேட்ச் ரெஃப்ரியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து, மேல்முறையீடு பி.சி.சி.ஐ ஒம்புட்ஸ்மேனுக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டது. ஒம்புட்ஸ்மேன் மெய்நிகர் விசாரணையை நடத்தி உறுதிப்படுத்தினார். மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது மற்றும் கட்டுப்பாடானது" என்று பி.சி.சி.ஐ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“