10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட், தன்னை ஏன் அந்த அணி தக்கவைக்கவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் ஏலத்திற்குள் வர "பணம்" ஒரு காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டு இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rishabh Pant disagrees with Sunil Gavaskar: ‘My retention wasn’t about the money for sure’
ரிஷப் பண்ட் ஐ.பி.எல் 2016 தொடருக்கான ஏலத்தில் டெல்லி அணியால் ரூ 1.9 கோடிக்கு வாங்கப்பட்டார். அதுமுதல் அவர் அந்த அணியின் நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டு வந்தார். இந்த சூழலில் தான், எதிர் வரும் ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் இந்த ஆண்டு டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், சம்பள பணத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பண்ட் டெல்லியை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும், ஆனாலும், டெல்லி நிர்வாகம் அவரை ஏலத்தில் திரும்பப் பெறலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய சுனில் கவாஸ்கர், "ஏலம் என்பது முற்றிலும் வேறுபட்டது. எனவே, அது எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்டை மீண்டும் வாங்குவது நிச்சயம் என்று நான் உணர்கிறேன்.
சில சமயங்களில், வீரர் தக்கவைக்கப்படும்போது, உரிமையாளருக்கும் வீரருக்கும் இடையே எதிர்பார்க்கப்படும் சம்பள பணம் குறித்து பேச்சு வார்த்தை நடப்பது பற்றி உங்களுக்குத் தெரியும். அவர்களில் சில வீரர்கள் அந்த அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப் படுவதையும் நீங்கள் பார்க்க முடியும். நம்பர் ஒன் தக்கவைப்புக் கட்டணக் குறைப்பு என்ன என்பதைச் சொல்வதை விட அவர்கள் அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நம்பர் ஒன் தக்கவைப்புக் கட்டணக் குறைப்பு என்னவாக இருக்கும் என்று சொல்வதை விட அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, அங்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் டெல்லி நிச்சயமாக ரிஷப் பண்ட்டை மீண்டும் அணிக்குள் கொண்டு வர நினைக்கும்.” என்று அவர் கூறினார்.
எக்ஸ் தளத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோவிற்குப் பதிலளித்த ரிஷப் பண்ட், "என்னுடைய தக்கவைப்பு பணத்தைப் பற்றியது அல்ல என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்." என்று கூறியுள்ளார்.
டெல்லி அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட், ஒரு சதம் மற்றும் 18 அரை சதங்களுடன் 3284 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். துரதிர்ஷ்டவசமான கார் விபத்து காரணமாக 2023 ஆம் ஆண்டு முழுவதையும் தவறவிட்ட போதிலும், பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்டார். ஐ.பி.எல் 2024 இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப்க்குச் செல்லத் தவறிய நிலையில், பண்ட் 446 ரன்கள் எடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.