இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்று முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand: Rishabh Pant fit to play Pune Test
இந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் பேட்டிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது காயத்தை பொருட்படுத்தாமல், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக ஆடிய அவர் 99 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில், ரிஷப் பண்ட் குணமடைந்து உடல் தகுதியுடன், புனேவில் அக்டோபர் 24-ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் விளையாட இருக்கிறார் என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“