Rishabh pant’s latest health updates in tamil: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருந்து வருபவர் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் (வயது 25). இவர் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி சென்ற நிலையில், டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, அன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
Advertisment
இந்த விபத்தில் பண்ட்டின் தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக இன்று மும்பைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசிய டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பின் (டி.டி.சி.ஏ.) இயக்குனர் ஷியாம் சர்மா, "டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை மும்பையில் உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்ல இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு டி.டி.சி.ஏ. வெளியிட்ட செய்தி குறிப்பில், பண்ட்டை பார்க்க மக்கள் செல்ல வேண்டாம். அதனை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. வி.ஐ.பி.க்கள் யாரும் அவரை பார்க்க செல்லவில்லை. இதனால் அவருக்கு நோய் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Advertisment
Advertisements
தவிர, பிசிசிஐ மருத்துவர்கள் குழு மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து நிலைமையை மதிப்பிட உள்ளார்கள். மேலும், அவரது மேல் சிகிச்சையை வெளிநாட்டில், குறிப்பாக லண்டனுக்கு மாற்றுவது குறித்தும் வாரியம் பரிசீலிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
"ரிஷப் தசைநார் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக மும்பைக்கு மாற்றப்படுகிறார். மேலும் அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கிறார். அவர் பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற விளையாட்டு எலும்பியல் மருத்துவர் டின்ஷா பர்திவாலாவின் மேற்பார்வையில் இருப்பார். அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை இருந்தால், யுகே அல்லது அமெரிக்காவில் நடத்த முடிவு எடுக்கப்படும்" என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.