Rishabh Pant Health update tamil news: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 30ம் தேதியன்று டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவரே காரை ஓட்டிச் சென்ற நிலையில், அதிகாலையில் சற்று கண் அசந்ததால் கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டிவைடர் கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்த மோசமான விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், பண்ட்டின் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில், ரிஷப் பண்ட்-க்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட்-க்கு வெள்ளிக்கிழமை முழங்கால் தசைநார் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது . அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். மேலும் நடவடிக்கை மற்றும் மறுவாழ்வு குறித்து டாக்டர் டின்ஷா பர்திவாலா ஆலோசனை வழங்குவார். பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவால் ஆலோசனை வழங்கப்படும்,” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil