"என்னில் பாதி நீ" - காதலியிடம் உருகும் ரிஷப் பண்ட்! அடுத்த கிரிக்கெட் லவ் ஜோடி ரெடி!

உன்னை நான் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க விரும்புகிறேன். ஏனெனில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம்

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வார்த்தைகளால் மட்டுமல்லாது பேட்டாலும் பேசி அசத்தினார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். சிட்னி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவுட்டாக நின்று, ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதுமட்டுமின்றி, டெஸ்ட் தொடரில், புஜாராவுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள்(350) எடுத்த வீரர் எனும் பெருமையையும் பண்ட் பெற்றார். ஆவரேஜ் 58.33 . கேப்டன் கோலியே இவருக்கு அடுத்த இடத்தில் தான் உள்ளார்.

அதேபோல், இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் 20 கேட்சுகள் பிடித்துள்ள ரிஷப், டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெயரையும் பெற்றார்.

21 வயதான ரிஷப் பண்ட், இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரிலும் இடம் பெறுவார் என தேர்வுக் குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார். தோனிக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாகும் அனைத்து அமசங்களும் நச்சென்று பொருந்தியிருக்கும் ரிஷப் பண்ட்டிற்கு, நச்சுனு கேர்ள் ஃபிரெண்டும் அமைந்துள்ளார்.

இஷா நெகி என்பவருடன் ரிஷப் பண்ட் இருக்கும் போட்டோ இப்போது இளைய கிரிக்கெட் உலகில் செம வைரல். தனது காதலியை கட்டியணைத்த படி உள்ள புகைப்படத்தை ரிஷப் சமூக தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “உன்னை நான் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க விரும்புகிறேன். ஏனெனில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம்” என்று குறிப்பிட்டு தனது காதலியின் புகைப்படத்தை ரிஷப் பகிர்ந்துள்ளார்.

இஷா நெகியும் அதே புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “என்னவன், என்னில் பாதி, என் சிறந்த நண்பன், என் வாழ்வின் காதல்” என்று வார்த்தைகளை பொழிந்துள்ளார்.

இளம் காதல் ஜோடியின் இந்த க்யூட் புகைப்படம் தான் பட்டி, ட்விட்டியெங்கும் வைரல்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close