இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேசம் 149 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வங்கதேசத்துக்கு ஃபீல்ட் செட் செய்த ரிஷப் பண்ட்
இந்நிலையில், இந்தியா இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் 3-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்து வருகிறது. மதிய உணவு இடைவெளியின் போது இந்தியா 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து, வாங்கதேச அணியை விட 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அரைசதம் அடித்துள்ள கில் - பண்ட் ஜோடியில், கில் 86 ரன்னுடனும், பண்ட் 82 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் போது இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பர் - பேட்டரான ரிஷப் பண்ட் பவுலிங் செய்து வரும் வங்கதேச அணிக்கு ஃபீல்ட் செட் செய்த சம்பவம் கிரிக்கெட் ரசிர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வங்கதேச அணியின் ஃபீல்டர்கள் ரிஷப் பண்ட்-டுக்கு ஆப் சைடு திசையில் இருந்தார்கள். ஆனால், அவரது லெக் சைடு கவரில் ஒரு ஃபீல்டர் இல்லை. இதனைக் கவனித்த அந்தப் பக்கம் வருமாறு வங்கதேச அணி வீரருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, பண்ட் குறிப்பிட்ட இடத்துக்கு வங்கதேச அணி வீரர் ஒருவர் ஓடி வந்து ஃபீல்டிங் செய்தார். பண்ட் செய்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
Rishabh Pant setting the field for Bangladesh. 😆🔥
— Johns. (@CricCrazyJohns) September 21, 2024
- What a character, Pant. pic.twitter.com/sRL69LPgco
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.