Advertisment

இது மோதலா, காதலா? லெஜன்ட் பட நடிகையுடன் யுத்தம் நடத்தும் ரிஷப் பண்ட்

Urvashi Rautela's "Chotu Bhaiya Should Play Bat Ball" Response After Rishabh Pant's Deleted Post Tamil News: ஊர்வசி ரவுடேலா - ரிஷப் பண்ட் இருவருக்கும் இடையே என்ன உறவு இருக்கிறது? என்பது பற்றி, கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
Rishabh Pant - Urvashi Rautela  Cold War, post goes viral in social media

Model-actress Urvashi Rautela - indian cricketer Rishabh Pant

Model-actress Urvashi Rautela - indian cricketer Rishabh Pant Tamil News: பாலிவுட்டில் நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. இவர் இந்தாண்டு தமிழில் வெளியான 'தி லெஜண்ட்' படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், தனது திரையுலகப் பயணம் பற்றியும், தனது வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்திருந்தார். அதில், தனக்கு நிறையபேர் காதல் புரோபோஸ்கள் செய்துள்ளதாகவும், தனக்காக பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருந்தார் என்றும், தனக்கு நேரம் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisment
publive-image

அந்த பேட்டியில், "நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்படியே புது டெல்லியில் ஒரு ஷோ அட்டன் பண்ண சென்றேன். அங்கு நான் முழு நாள் ஷூட்டிங்கில் இருந்தேன். சுமார் 10 மணி நேரம் படப்பிடிப்புக்கு பிறகு, நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பி சென்றேன். பெண்கள் தயாராக இருக்க நிறைய நேரம் எடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு மிஸ்டர் ஆர்பி வந்தார். அவர் லாபியில் அமர்ந்து எனக்காக காத்திருந்தார். அவர் என்னை சந்திக்க விரும்பினார். எனக்கும் இவ்வளவு கால்கள் வந்ததை நான் உணரவில்லை. எனவே, நான் கண்விழித்தபோது, ​​அவர் எனக்கு 16-17 போன் செய்து இருந்தார். யாரோ எனக்காகக் காத்திருக்கிறார்கள், நான் செல்லவில்லை என்று நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. நிறைய பெண்கள் யாரையாவது காத்திருக்க வைப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள். அந்த மரியாதைக்காக, நீங்கள் மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று அவரிடம் சொன்னேன்." என்று ஊர்வசி கூறியுள்ளார்.

ஊர்வசி அந்த பேட்டியில் ரிஷப் பண்ட்டின் பெயரைக் குறிப்பிடாமல் 'ஆர்பி' என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் குறித்த நெட்சன்களின் பல்வேறு பதிவுகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாயின. இந்த நடிகை ரிஷப் பண்ட்டை நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருக்க வைத்தாரா? என சமூக வலைத்தளத்தில் ஊர்வசி ரவுடேலா கொடுத்த நேர்காணலின் வீடியோ பதிவு செய்து கேள்வியும் எழுப்பினர்.

இந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இன்ஸ்டா ஸ்டோரியில், மக்கள் பிரபலமாக இருக்கவும், தலைப்புச் செய்திகளில் இருக்கவும் நேர்காணல்களில் பொய் சொல்வது எவ்வளவு அபத்தமானது. பெயருக்காகவும் புகழுக்காகவும் பொய் பேசுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று பதிலடி கொடுத்தார்.

பின்னர் ரிஷப் பண்ட் தான் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரியை 7 நிமிடங்களுக்குப் பிறகு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்குள் இணையவாசிகள் இந்த இன்ஸ்டா ஸ்டோரியின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த பதிவும் வைரலாகியது.

இந்த வைரல் பதிவிற்கு இதற்கு பதிலடி கொடுத்த ஊர்வசி ரவுடேலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) நள்ளிரவில், 'சோட்டு பாய்யா பேட் பந்து விளையாட வேண்டும். யங் கிடோ டார்லிங் தேரே லியே, நான் பிரபலமடைய வேண்டிய அவசியம் அல்ல" என்று பதிவிட்டார்.

மேலும், #RPChotuBhaiyya, #DontTakeAdvantageOfASilentGirl என்ற ஹேஷ்டேக்குகள் மற்றும் சற்றே குழப்பமான #CougarHunter ஆகியவற்றையும் சேர்த்து பதிவிட்டார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தபாங் பட பாடலான முன்னி பத்நாம் ஹுயியிலிருந்து எடுக்கப்பட்ட ஊர்வசியின் வார்த்தைகள், பெயரிடப்படாத "சோட்டு பாய்யா" அல்லது "ஆர்பி"யின் காதல் தாக்கங்களை நிராகரிப்பதாகத் தெளிவாக இருந்தாலும், ஊர்வசி தன்னை ஒரு "கூகர்" என்று குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கூகர் பாப் கலாச்சார வார்த்தையாகும். ஒரு வயதான பெண் ஒரு இளைஞனுடன் பாலியல் உறவைத் தேடுவது என்று பொருள்படும்.

ஊர்வசி ரவுடேலா - ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் இடையே என்ன உறவு இருக்கிறது என்பது பற்றி, கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்தன. இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்திருக்கலாம் என்று மற்றொரு தரப்பும் தகவல்களை தெரிவிக்கின்றன. ஆனால், இது மோதலா, காதலா? என்று தெரியாமல் இருவரின் ரசிகர்களும் குழம்பியுள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Rishabh Pant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment