Rishabh Pant | T20 World Cup 2024 | India Vs Ireland: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று புதன்கிழமை நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த 8-வது லீக்கில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து 16 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டையும், சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 97 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - விராட் கோலி களமாடினர். இதில் கோலி ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் ரோகித்துடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியில் அரைசதம் அடித்த கேப்டன் ரோகித் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் நிலையில், காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கையில், அவர் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டுக்குப் பின் களம் வந்த துபே உடன் ஜோடி அமைத்த பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்து, வெற்றிக்கு 8 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த பண்ட் 13.2வது ஓவரில், தனது அக்மார்க் சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் தனது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டதை பார்த்து அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பேரி மெக்கார்த்தி மிரண்டு போனார்.
மெக்கார்த்தி அந்தப் பந்தை குட் லெந்த் பந்தாக இடது கை வீரரான பண்ட்டுக்கு குறுக்காக வீசினார். அதற்கு எதிர்திசையில் மட்டையைச் சுழற்றிய பண்ட் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் செய்து சிக்சருக்கு பறக்க விட்டு மிரட்டினார். வேகப்பந்து வீச்சாளரின் பந்தை அவர் இப்படி ரிவர்ஸ் ஸ்கூப் செய்வது இது முதல் முறை அல்ல. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் பந்துகளை அவர் ஸ்டைலில் பறக்கவிட்டு அசத்தி இருக்கிறார்.
தவிர, ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்காக ஆடிய டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அவர் இதுபோன்ற ரிவர்ஸ் ஸ்கூப் செய்து அதிரடியாக ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் பண்ட் 36 ரன்கள் எடுத்தார். அவரது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார். "நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதைப் பார்த்திருக்கிறோம். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக இரண்டாவது புதிய பந்தில் அவர் இதே ஷாட்டை ஆடி இருந்தார். இதற்கு நெட்ஸில் அவர் பயிற்சி செய்தது தான் அவருக்கு உதவியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் ரிஷப் பண்ட்டிற்கு என்ன தேவையோ அதைத்தான் அவர் இன்று சிறப்பாக ஆடினார்." என்று கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வரும் நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Rishabh Pant - how do you play these shots?
— ICT Fan (@Delphy06) June 5, 2024
✅ Anderson
✅ Stoinis
✅ Today vs Ireland 🇮🇪 (Mccarthy)
pic.twitter.com/3Sn8pdN6mz
What a shot to Finish the game 💥
— India Sports Culture (@INDSportCulture) June 5, 2024
Rishabh Pant 🥶 #IREvsIND pic.twitter.com/OTK0Rbs7dC
🫣 Pant's usual way of playing a shot.#RishabhPant #INDvIRE #IREvsIND #TeamIndia #BharatArmy https://t.co/WrTxUVrImu
— The Bharat Army (@thebharatarmy) June 5, 2024
This is a own shot of Rishabh Pant!👌 pic.twitter.com/3UX7uhHLK7
— CricketGully (@thecricketgully) June 6, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.