Gujarat Assembly Election News in tamil: Rivaba Jadeja wins in Jamnagar North: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிவாபா சோலங்கியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பாஜக-வில் ஜடேஜா மனைவி
32 வயதான ரிவாபா ஜடேஜா மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இவர் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்று அழைக்கப்படும் கர்னி சேனா அமைப்பின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார். இதன்பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் முறையாக இணைந்தார். அப்போது, பாஜகவின் ஜாம்நகர் அலுவலகத்தில் நடந்த ஊடக நிகழ்வில், அவரை ஜாம்நகர்-தெற்கு எம்எல்ஏ ராஞ்சோ ஃபால்டு மற்றும் ஜமனார் எம்பி பூனம் மடம் ஆகியோர் கட்சிக்கு வரவேற்றனர்.

தொடர்ந்து ரிவாபா ஜடேஜாவுக்கு குஜராத் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு காயம் காரணமாக ஓய்வில் இருந்த கணவர் ரவீந்திர ஜடேஜா, ஜாம்நகர் தொகுதியில் களமிறங்கி வாக்குகளை சேகரித்தார். மேலும், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அவர் ஆதரவு கோரினார்.
இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தலில் களமாடும் ஜடேஜா மனைவி… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி
இந்நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி பெற்றார்.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ரிவாபா ஜடேஜா தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. பிறகு அவர் 3வது இடத்திலும், காங்கிரஸ் 2வது இடத்திலும் ஆம் ஆத்மி முதலிடத்திலும் இருந்தனர். பின்னர், பிற்பகல் வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து படிப்படியாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தார் ரிவாபா. இறுதியில் அவர் 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தார்.
17 சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, ரிவாபா ஜடேஜா 88110 வாக்குகள் பெற்றதாகவும், அவரது நெருங்கிய போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சியின் கர்ஷன் கர்மூர் 34818 வாக்குகள் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரிவாபா ஜடேஜா நெகிழ்ச்சி
இந்த வெற்றி பெற்ற பிறகு பேசிய ரிவாபா கணவர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது பிரச்சாரம் முழுவதும் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தார் என்றும் கூறினார். மேலும், “இந்த வெற்றிக்காக அவருக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன். என் கணவர் என்ற முறையில் அவர் எப்போதும் என் பக்கம் நின்றார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார், அது எனக்கு ஒரு பெரிய விஷயம்.” என்று கூறி நெகிழ்ந்தார் ரிவாபா.
இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தலில் களமாடும் ஜடேஜா மனைவி… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
“இது அவருக்கு முதல்முறை அனுபவம், மோடிஜி வந்தபோது, ’நீங்கள் (ரவீந்திரன்) இதற்கு முன்பு இதுபோன்ற பீல்டிங்கைச் செய்திருக்க மாட்டீர்கள்’ என்று ஒரு இலகுவான குறிப்பில் கருத்து தெரிவித்தார். அவர் (ரவீந்திரன்) எனக்காக தன்னால் முடிந்ததைச் செய்தார்,” என்றும் ரிவாபா கூறினார்.
Congratulations to Rivaba Jadeja on a massive victory of 30,000+ majority votes. #RivabaJadeja
— Aman Kumar (@amankr_05) December 8, 2022
#GujaratElectionResult #GujaratElections #Gujarat pic.twitter.com/qpZwZewX9c
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil