New Update
/indian-express-tamil/media/media_files/ULiqOjg2LdeQ1eVOrkvt.jpg)
ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். அப்போது தான் அவர் அந்த புதிய சர்ச்சையில் சிக்கினார்.
/
ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். அப்போது தான் அவர் அந்த புதிய சர்ச்சையில் சிக்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரியான் பராக். 22 வயதான இவர் அண்மையில் நடைபெற்ற 17-வது ஐ.பி.எல் டி20 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். இந்த தொடரில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளே - ஆஃப்க்கு முன்னேறிய ராஜஸ்தான் ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-ல் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறியது.
ராஜஸ்தான் அணிக்காக இந்த சீசனில் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய இளம் வீரர் ரியான் பராக் 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை எடுத்திருந்தார். மேலும், அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகைகளாக அனன்யா பாண்டே, சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இளம் வீரர் ரியான் பராக்.
ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். அப்போது தான் அவர் அந்த புதிய சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் தளத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்தது. அதில், அவர் அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை தேடியதும் அம்பலமானது.
ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இணைய வாசிகள் உள்ளிட்ட பலரும் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.