ராக்கெத்லான் சாம்பியன்ஷிப்: பதக்கங்களை அள்ளிய கோவை அண்ணன் – தங்கை

உலக அளவிலான ராக்கெத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த சகோதர - சகோதரிகள் இருவரும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

உலக அளவிலான ராக்கெத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த சகோதர - சகோதரிகள் இருவரும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

author-image
WebDesk
New Update
Rocketathlon Championship: Coimbatores Brother - Sister win 8 Medals Tamil News

8 பதக்கங்களை வென்ற சாதனை படைத்து கோவை திரும்பிய சகோதர - சகோதரிகளான ஆதித் மற்றும் ஆதிரை-க்கு உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சகோதர - சகோதரிகளான ஆதித் மற்றும் ஆதிரை என இருவர் கலந்து கொண்டனர்.

Advertisment
publive-image

அண்ணன், தங்கையான இருவரும் லண்டன் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் இருவரும் மொத்தமாக 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று அசத்தினார்.

publive-image
Advertisment
Advertisements

இதன்மூலம், ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளதுள்ளனர். கோவை திரும்பிய அவர்களுக்கு உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: