கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விளையாட்டு உலகமே முடங்கிப் போயுள்ளது. விளையாட்டு இருந்தால் தானே எனர்ஜி வரும். விளையாட்டு இருந்தால் தான் ஆரோக்கியம் வரும். விளையாட்டு இருந்தால் தானே நாட்கள் நகரும். ஆனால், இன்று சூழல் விளையாட்டை முடக்கியுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் திருவிழா கோலாகலத்துடன் இந்நேரம் துவங்கியிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் கள்ள மௌனம் காக்கிறது உலகம்,
உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாத்ரூம்-ல என்னய்யா சேலஞ் வேண்டி கெடக்கு? (வீடியோ)
அப்படித் தான் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரும். இருப்பினும், இந்த சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ட்ரிக் ஷாட்களை பயிற்சி செய்வதன் மூலம் தன்னை பிஸியாக வைத்திருக்க ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்.
இதுகுறித்து ரோஜர் பதிவிட்ட ஒரு நிமிட வீடியோவில், “ட்ரிக் ஷார்ட்களை எப்படி விளையாட வேண்டும் என்பது நினைவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்கிறேன் #TennisAtHome,” என்று கேப்ஷனிட்டுள்ளார்.
30, 2020
இந்த மாத தொடக்கத்தில், ரோஜர் பெடரர் தனது மனைவி மிர்காவுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 1 மில்லியன் டாலர் தொகை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலும் இருந்து பல விளையாட்டு பிரபலங்கள் தாமாக முன்வந்து தங்கள் நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”