rohit calls harbhajan to bowl for india ind vs sa 1st test score updates - 'இந்தியாவுக்காக பந்து வீச வாருங்கள் ஹர்பஜன்' - ரோஹித் ஷர்மா ஜாலி வேண்டுகோள்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
Advertisment
டெஸ்ட் ஓப்பனராக முதல் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, 244 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு புறம் இரட்டை சதம் விளாசினார் மாயங்க் அகர்வால். 371 பந்துகளில் 215 ரன்கள் குவித்து அவுட்டானார். 502 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்ய, தென்னாப்பிரிக்கா நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தின் முடிவில், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், டீன் எல்கர் சதம் விளாசி அசத்த, கேப்டன் டு பிளசிஸ் 55 ரன்கள் எடுத்து சப்போர்டிவ் ரோல் கொடுத்தார். அஷ்வின் ஓவரில் அவர் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய டி காக், இந்திய பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு சதமடித்தார். டீன் எல்கர் 160 ரன்களிலும், டி காக் 111 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Advertisment
Advertisements
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், போட்டியின் போது, ரோஹித் செய்த சேட்டை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
போட்டியின் போது ஹிந்தியில் ஹர்பஜன் சிங் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தார். அப்போது, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வீரர்களால் சற்று எரிச்சலில் இருந்த ரோஹித் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "பிட்ச் மிகவும் கரடு முரடாகிவிட்டது. வந்து எங்களுக்காக பந்து வீசுங்கள் பஜ்ஜூ பா. உள்ள வாங்க... உள்ள வாங்க" என்று அவர் பேசுவது மைக்கில் பதிவாகியுள்ளது.