Rohit Sharma Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் - கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 200 ரன்கள் வரை குவித்தது. மேலும், இருவருமே சதம் விளாசி மிரட்டினர். ரோகித் 101 ரன்னிலும், கில் 112 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டிய அரைசதம் விளாசி 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. இதனால், நியூசிலாந்துக்கு 386 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதை துரத்தி வருகிறது.
சபாஷ் ரோகித்… 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த 30-வது சதம்: டாப் 3 வீரர்களும் இந்தியர்களே!
இந்த ஆட்டத்தில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து மிரட்டினார். அவர் மட்டையையும், தொப்பியையும் உயர்த்து காட்டிய போது டக்-அவுட்டில் இருந்த அனைவருமே எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். மேலும், மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களின் கூச்சல் காதைக் கிழித்தது. அந்த அளவிற்கு ரோகித்தின் சதம் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஏன்னென்றால், ரோகித் கடைசியாக 19 ஜனவரி 2020 அன்று பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் தான் சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது தான் அவர் 3 ஆண்டுகளுக்குப்பிறகு தனது 30-வது ஒருநாள் சதத்தை விளாசி இருக்கிறார்.
இந்த அபார சதம் மூலம் ரோகித், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் மூன்றாவது அதிக சதங்களை சமன் செய்தார். மேலும், தொடக்க ஆட்டக்காரராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்கள் அடித்த சனத் ஜெயசூர்யாவை (28 சதம்) சமன் செய்தார்
35 வயதான ரோகித் இதே இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிசம்பர் 2017ல், இலங்கைக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் தனது அதிவேக டி20 சதத்தையும் பதிவு செய்தார்.
Good start for India. Openers are looking to free their arms. Not a dull moment. 🤯
Where do you think this match is heading? #BelieveInBlue and back #TeamIndia in the 3rd Mastercard #INDvNZ ODI, on Star Sports & Disney+Hotstar. pic.twitter.com/ByyAD19Jba— Star Sports (@StarSportsIndia) January 24, 2023
ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார். மொத்தமாக 85 பந்துகளை எதிர்கொண்டு இருந்த ரோகித் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
After completing century, Suryakumar Yadav was asking for double century from Rohit Sharma. What a great bond of Ro 💙 and Surya dada 😭🙏. pic.twitter.com/AKdhV0XGQ7
— Vishal. (@SPORTYVISHAL) January 24, 2023
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் - 452 இன்னிங்ஸில் - 49 சதங்கள்
விராட் கோலி - 261 இன்னிங்ஸில் - 46 சதங்கள்
ரோகித் சர்மா - 30 சதங்கள் - 234 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் 365 இன்னிங்ஸ்களில் - 30 சதங்கள்
சனத் ஜெயசூர்யா - 433 இன்னிங்ஸ்களில் - 28 சதங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.