friendship day: இன்று உலக நண்பர்கள் தினம்...
நட்பு!. இந்த வார்த்தையை கேட்டவுடன் அனைவரிடமும் ஒரு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். உலகில் சொந்த பந்தங்கள் இல்லாதவர்கள் கூட உண்டு. ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களே இல்லை.
'உண்மையான நண்பனை ஆபத்தில் அறி' என்பது ஆல்டைம் பெஸ்ட் பழமொழியாகும்.
நண்பனை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமென கவிஞர் கண்ணதாசன் அழகாக கூறியுள்ளார். 'நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல அந்த நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன் தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா நட்பை பற்றிய விளக்கம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "நீண்ட நாள் தெரிந்தவர் என்பதால் ஒருவர் உண்மையான நண்பன் ஆகிவிட முடியாது... உங்களை விட்டு என்றுமே விலகி செல்லாதவர் தான் உண்மையான நண்பன். அதுதான் நட்பு. இதுதான் நான் கற்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.
செமல ...!