Rohit Sharma | Mumbai Indians | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு மும்பை நடந்த ஆட்டத்தில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், துபே 66 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 207 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் அதிரடியாக விளையாடி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து (63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 105 ரன்கள்) அசத்தினார்.
ஆனால், அவருடன் ஜோடி அமைத்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு வெளியேறினர். இதனால், மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய சென்னை அணியில் அதிகபட்சமாக மதீஷ பத்திரன 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
ரோகித் சதம் வீண் - பிரமிக்க வைத்த ரோகித் செயல்பாடு
இந்தப் போட்டியில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான ஹிட்மேன் ரோகித் சர்மா 61 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தமாக 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 105 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அணியை வெற்றி பெற வைக்க முடியாததை உணர்ந்த அவர் தான் சதம் விளாசியதை ஹெல்மெட்டை கழற்றி கொண்டாடவில்லை.
I. C. Y. M. I
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
It was some knock!
It was some HUNDRED!
It was not to be tonight but Rohit Sharma - Take A Bow 🙌 🙌
Recap the match on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #MIvCSK | @ImRo45 | @mipaltan pic.twitter.com/ARFd3GmMuI
இதேபோல், போட்டி முடிந்த பிறகு எந்த வீரருடனும் கை குழுக்கமால் சோகமாக டக்-அவுட் நோக்கி நடந்தார். அங்கு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த பின்னரே மீண்டும் மைதானத்திற்குள் வந்து வீரர்களுடன் சகஜமாக பேசினார். கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கபோவதை தன்னிடம் கலந்து ஆலோசிக்காத அணிக்காக தான் விளையாடினாலும், அதனை பொருட்படுத்தாது தனது கிரிக்கெட் வலக்கையில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரோகித். அவரது செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma almost in pain after playing lone warrior innings against CSK. Feel for him ❤️🔥🥹
— 𝑠𝑎𝑣𝑎𝑔𝑒 (@SavageBoyBunty) April 15, 2024
#RohitSharma • #MIvsCSK pic.twitter.com/rYTlEYaj6Q
Doesn’t look like he scored a century yesterday.#RohitSharma
— Anu - Proud Indian (@ProudIndian2222) April 15, 2024
pic.twitter.com/uYKlJvqqrp
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.