பரபரப்பாக பேசிக் கொண்ட ரோகித் - நீதா அம்பானி... புதிய யூகங்களை கிளப்பும் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணி உடனான தனது எதிர்காலம் பற்றி ரோகித் சர்மா அணியின் உரிமையாளர் நீதா அம்பானியிடம் கூறியிருப்பார் என்கிற ஊகங்களை சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி உடனான தனது எதிர்காலம் பற்றி ரோகித் சர்மா அணியின் உரிமையாளர் நீதா அம்பானியிடம் கூறியிருப்பார் என்கிற ஊகங்களை சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Rohit Sharma and Nita Ambani spotted in deep discussion MI vs LSG clash pics and video goes viral Tamil News

ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த சந்திப்பின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு அணியின் உரிமையாளர் நீதா அம்பானி பதக்கம் அணிவித்தார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Rohit Sharma | Mumbai Indians | IPL 2024 | Nita Mukesh Ambani: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மும்பையில் வைத்து எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

Advertisment

இந்த ஆட்டத்திற்குப் பிறகு, ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த சந்திப்பின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு அணியின் உரிமையாளர் நீதா அம்பானி பதக்கம் அணிவித்தார். முன்னதாக,  நீதா அம்பானியும் ரோகித் சர்மாவும் மைதானத்தில் பரபரப்பாக எதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி உடனான தனது எதிர்காலம் பற்றி ரோகித் சர்மா அணியின் உரிமையாளர் நீதா அம்பானியிடம் கூறியிருப்பார் என்கிற ஊகங்களை சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர். அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், "நீதா அம்பானிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே என்ன விவாதம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisment
Advertisements

"ரோகித் ஷர்மா மற்றும் நீதா அம்பானி இடையே தீவிரமான உரையாடல் நடக்கிறது. ஏதாவது யூகங்கள் இருக்கிறதா?" என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Rohit Sharma Mumbai Indians Nita Mukesh Ambani IPL 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: