Advertisment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணிக்கு திரும்பிய ரோஹித், கோலி; டி20 உலகக் கோப்பை கேப்டன் யார்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
virat rohit

விராட் கோலி - ரோஹித் ஷர்மா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் காயமடைந்ததால், டி20 போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கும் தொடருக்கான முழு பலம் கொண்ட அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rohit Sharma and Virat Kohli return for T20Is against Afghanistan, captain for T20 World Cup to be decided later

ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவுக்காக கடைசியாக டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய பிறகு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர். இதனால், ஜூன் மாதம் அடுத்த டி20 உலகக் கோப்பை விளையாடுவதற்கான வாய்ப்புகளை பிரகாசமாகி உள்ளது. ரோஹித் மற்றும் விராட் கடைசியாக நவம்பர் 2022-ல் டி20 போட்டிகளில் விளையாடினர். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது இந்தியா அரையிறுதியில் தோல்வி அடைந்த போட்டியே அவர்கள் விளையாடிய கடைசி டி20 போட்டியாக இருந்தது.

மூத்த பேட்ஸ்மேன்கள் இருவரும் தேர்வாளர்களிடம் தங்களின் இருப்பு குறித்து தெரிவித்ததாக கடந்த வாரம் இந்த செய்தி தெரிவித்திருந்தது. ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். ஆனால், ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் தேர்வாளர்கள் ரோஹித் ஷர்மாவைத் தேர்வு செய்தனர்.

இருப்பினும், காயத்தால் பாதிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதி அடைந்தவுடன் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அணியில் முன்னிலை வகிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டி20 தரவரிசையில் நம்பர்.1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தேர்வு செய்யப்படவில்லை.

ஹர்திக் இல்லாததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரிலும், டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த மூன்று போட்டிகளிலும் சூர்யகுமார் கேப்டனாக இருந்தார்.

தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பயணம் செய்ததை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, ஐ.பி.எல் ஃபார்ம் முக்கியமானதாக இருக்கும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்தபோது, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இந்தியா மீண்டும் ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை.

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளின்போது ரோஹித் ஷர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கங்களைக் கொடுத்தது. இதனால், தேர்வாளர்கள் அவரது ஃபார்மை புறக்கணிக்க முடியவில்லை. கோஹ்லி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் சிறந்த பேட்டிங் ஃபார்மில் உள்ளார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையின்போது சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடித்தார். ரோஹித்தின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 129.24 ஆகவும், கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 137.96 ஆகவும் உள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் எழுந்து விளையாடத் தொடங்கவும், மற்றொரு இறுதி பரிசைத் தேடவும் இது உத்வேகத்தை அளிக்கிறது என்று ரோஹித் ஷர்மா கூறினார்.

ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு

இதற்கிடையில், இந்த அறிவிப்பில், சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய பந்துவீச்சில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தேர்வுக் குழு ஓய்வு அளித்துள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு திரும்புவதற்கு முன் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க தேர்வுக் குழு விரும்பியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் இருந்து விலகிய தீபக் சாஹர் தனிப்பட்ட அவசரநிலை காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் தேர்வுக் குழு ஓய்வு அளித்துள்ளது. அதே நேரத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து பாண்டியா இன்னும் குணமடையாத நிலையில், தேர்வாளர்கள் மும்பையின் ஷிவம் துபேவை தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். இவர்கள் இருவரைத் தவிர, சுழற்பந்து வீச்சில், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோரும் உள்ளனர். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா என 2 பேர் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தொடரின் போது 'தனிப்பட்ட காரணங்களை' காரணம் காட்டி இஷான் கிஷான் வெளியேறிய பிறகு ஏன் தொடரில் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்லில் தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார்.

அணியில் கே.எல். ராகுல் ஏன் இல்லை?

ரோஹித் ஷர்மாவும் விராட் கோஹ்லியும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் பெற்றுள்ள நிலையில், கே.எல் ராகுல் இப்போதைக்கு காத்திருக்க வேண்டும். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக கிட்டத்தட்ட அனைத்து டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால், அணியில் ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கோஹ்லி மற்றும் ரோஹித் ஆகியோருடன், டாப் ஆர்டர் இடங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர்களான ஜிதேஷ் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஃபினிஷர்களாக மிகவும் பொருத்தமானவர்கள் என்று தேர்வாளர்கள் நம்புகிறார்கள்.  எனவே, கே.எல். ராகுல்  டாப் ஆர்டரைத் தவறவிட்டார். இது வரவிருக்கும் ஐ.பி.எல் உலகக் கோப்பைக்கான இரண்டு விக்கெட் கீப்பர் இடங்களுக்கான போட்டியாக இருக்கும்.

Inputs: Venkata Krishna B

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment