/indian-express-tamil/media/media_files/2025/05/07/P8A4YKJqDD4Foq6OiB1B.jpg)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவிக்கும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma announces retirement from Test cricket; will continue to play for India in ODIs
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை நிற உடையில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி," என்று குறிப்பிட்டு இந்திய அணி டெஸ்ட் தொப்பியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். சராசரி 40.57 சராசரி ஆகும். கடந்த 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவரின் சராசரி 6.63 ஆகும், அவர் 73 ரன்கள் மட்டுமே எடுத்தார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மெல்போர்னில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் 340 ரன்கள் எடுத்த வெற்றியை நோக்கிச் சென்ற போட்டியில், 40 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தத் தொடரில் இந்தியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.