Rohit Sharma Most Ducks By Players In IPL History Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று பிற்பகல் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Swing and Sling ✅
— Chennai Super Kings (@ChennaiIPL) May 6, 2023
Now we go ballistic! 💥#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/bNbDlF4MKP
ரோகித் மோசமான சாதனை
இந்த போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட அவர் தீபர் சாகர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் கேட்சாகி அவுட்டானார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தமாக 16 முறை டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
👉MSD comes up to the stumps 😎
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
👉Rohit Sharma attempts the lap shot
👉@imjadeja takes the catch 🙌
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper 🎥🔽 #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7
இந்த வரிசையில் சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14), ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே(தலா 13 முறை), கவுதம் கம்பீர்(12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், வார்னர், கோலி ஆகியோர் (தலா 10) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil