ரோகித் சர்மா தனது உரையாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், "பார்வைகள் மற்றும் ஈடுபாட்டிற்காக" தனது உரையாடல்களை ஒளிபரப்பியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது மும்பை தோழர் அபிஷேக் நாயருடன் ஈடன் கார்டனில் அரட்டையடிக்கும் சமீபத்திய கிளிப் முதலில் ஒரு உரிமையாளரின் சமூக ஊடக கணக்கில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மா உலகில் அறியப்பட விரும்பாத தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவதாக வெளியிட்ட பிறகு, அந்த கிளிப் நீக்கப்பட்டது. இதற்குள் சம்பந்தப்பட்ட வீடியோ அதிகமாக ஷேர் ஆனது.
இதற்குப் பிறகு, ரோகித் சர்மா வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஸ்டாண்டில் தனது நண்பர்களுடன் அரட்டையடிக்கும் மற்றொரு கிளிப்பில் காணப்பட்டார். இந்த இரண்டாவது கிளிப்பில், “ரோகித் சர்மா தனது ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என்று கேமராமேன் சொல்வதைக் கேட்கலாம்”.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, “தற்போது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மற்றவர்கள் எளிதில் ஊடுருவும் போல் மாறிவிட்டது. எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை பகிர்ந்துக்கொள்வது எங்களது தனியுரிமை. எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்டாலும் அதையும் மீறி ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும்” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Rohit Sharma blasts Star Sports for breach of privacy; slams broadcaster for focus on ‘views and engagement’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“