worldcup 2023 | india-vs-new-zealand | rohit-sharma | chris-gayle: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் - நியூசி., பவுலிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் அதன்படி, பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்துள்ளது.
யுனிவர்சல் பாஸ் சாதனை முறியடித்த ஹிட்மேன்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, உலகக் கோப்பையில் 50-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். இதன் மூலம், சிக்ஸர்களை பறக்கவிடும் மன்னனான வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
'ஹிட்மேன்' ரோகித் ஒட்டுமொத்த சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், 2015 உலகக் கோப்பையில் 26 அதிகபட்ச சிக்ஸர்களை பறக்கவிட்ட யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்லை மீண்டும் ஒருமுறை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி களமிறங்கிய நிலையில் கேப்டன் ரோகித் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அவரது விக்கெட்டை கைப்பற்ற நியூசிலாந்து ஒரு பக்கம் போராட, அவர் சிக்கி பந்துகளை எல்லாம் நாலாபுறமும் அடித்து நொறுக்கினார்.
அவர் 5வது ஓவரில், உலகக் கோப்பைகளில் தனது 50வது சிக்சருக்கு டிரென்ட் போல்ட்டின் பந்து வீச்சை டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் பறக்கவிட்டார் ரோகித். அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் அவுட் ஆனார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.