worldcup 2023 | india-vs-bangladesh | rohit-sharma: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது காரை 200 கி.மீ. வேகத்தில் ஓடியதால் அவருக்கு 3 வித அபராதங்களை டிராபிக் போலீசார் விதித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது அணியில் சேருவதற்காக, மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் ரோகித் சர்மா தனது லம்போர்கினி காரை ஓட்டியுள்ளார். இந்த விதிமீறலை உறுதி செய்துள்ள டிராபிக் போலீசார், மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவுடன் காரை ஓட்டியது உள்ளிட்ட பிரிவியூகளில் ரோகித்துக்கு 3 வித அபராதங்களை விதித்துள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, அதன்பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“