மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை இணைந்து அறிவித்தனர். அப்போது, மும்பையில் அடுத்த வாரம் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெறவுள்ள ரஞ்சி டிராபி போட்டியில் தான் விளையாட உள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா உறுதிப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma confirms first Ranji Trophy appearance in 10 years in Mumbai vs J&K match
இது தொடர்பாக ரோகித் பேசுகையில், "ரஞ்சி டிராபி போட்டியில் நான் விளையாட உள்ளேன். கடந்த 6-7 ஆண்டுகளில் உள்ள எங்களது காலெண்டரை நீங்கள் பார்த்தால், அதில் கிரிக்கெட் நடக்கும் போது நாங்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டு இருக்கவில்லை. நீங்கள் ஐ.பி.எல் தொடரை முடிக்கும் போது உங்களுக்கு அந்த நேரம் கிடைக்கும், அதன் பிறகு எதுவும் நடக்காது, ஆனால் நீங்கள் எங்கள் உள்நாட்டு போட்டியைப் பார்த்தால், அது செப்டம்பரில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தான் முடியும். அப்போது தான் இந்தியா நிறைய கிரிக்கெட் விளையாடுகிறது.
எனவே சில ஃபார்மட்களில் விளையாடாத மற்றும் நேரம் கிடைக்கும் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றால் அவர்கள் விளையாடுவார்கள், ஆனால் கடந்த 6-7 ஆண்டுகளாக, நான் விளையாடத் தொடங்கியதிலிருந்து என்ன நடந்தது என்பதைப் பற்றி என்னால் சொல்ல முடியும். வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட், இது 2019 முதல். உங்களுக்கு நேரமில்லை. பின்னர் நீங்கள் ஆண்டு முழுவதும் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட்டை விளையாடும்போது, வரவிருக்கும் சீசனுக்குத் தயாராக இருக்க, புத்துணர்ச்சியடையவும், உங்கள் மனதைச் சரியாகப் பெறவும், ஒரு கிரிக்கெட் வீரரும் உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை.
நாங்கள் இப்போது அதுபற்றி பேசியுள்ளோம், யாரும் அதை ஒரு துச்சமாக எண்ணிவிடக்கூடாது. ஒருவர் சீசனை எப்படிக் கடந்து சென்றார், அவருக்கு எவ்வளவு ஓய்வு தேவை என்பதைப் பார்த்து, குறிப்பிட்ட வீரர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்து தீர்மானிக்கிறோம். பின்னர் வெளிப்படையாக இப்போது நேரம் இருந்தால், நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.
ரோகித் கடைசியாக நவம்பர் 2015 இல் வான்கடே ஸ்டேடியத்தில் உத்தரபிரதேசத்திற்கு எதிராக நடந்த ரஞ்சி போட்டியில் ஆடினார். அதன்பிறகு, 10 ஆண்டுக்குப் பின் இப்போது களமாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.