காதலர் தினத்தில் 'ஆட்டநாயகன்' விருதை மனைவிக்கு சமர்ப்பித்த ரோஹித் ஷர்மா!

'ஹேப்பி வேலண்டைன்ஸ் டே ரித்ஸ்' என்று தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்

அது என்னமோ தெரியவில்லை, தென்னாப்பிரிக்க தொடரில் இவ்வளவு நாள் அடிக்காத ரோஹித் ஷர்மா, காதலர் தினத்துக்கு முந்தைய நாளான நேற்று, சதம்(115) அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

முதல் நான்கு ஒருநாள் போட்டியிலும் வருவதும் போவதுமாக இருந்த ரோஹித், நேற்று நிலைத்து நின்று, தனது தொடர்ச்சியான மோசமான ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். முடிவில், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. குறிப்பாக, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதையும் வென்றார் ரோஹித்.

இந்த நிலையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, ரோஹித் தனது இன்ஸ்டாகிராமில், மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற புகைப்படத்தை பதிவிட்டு, ‘ஹேப்பி வேலண்டைன்ஸ் டே ரித்ஸ்’ என்று தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Happy Valentine’s Day Rits ❤️ @ritssajdeh

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பின், அதை நேரில் கண்டு களித்த மனைவி ரித்திகாவுக்கு இரட்டை சதத்தை ரோஹித் சமர்ப்பித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கி வரும் ஸ்பின் ட்வின்ஸ்களான சாஹல்  மற்றும் குல்தீப் ஆகியோரும் காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close