ரோகித் உள்ளே; டு பிளெசிஸ் வெளியே... ஐ.பி.எல் அணிகள் தக்கவைக்க போகும் வீரர்கள் இவங்தான்!

இந்தாண்டு நடக்கவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன் அனைத்து 10 அணிகளும் 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதைக் காண்பது மிகவும் சாத்தியமில்லை என்றாலும், தக்கவைக்கப்படக்கூடிய முதல் 6 வீரர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

இந்தாண்டு நடக்கவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன் அனைத்து 10 அணிகளும் 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதைக் காண்பது மிகவும் சாத்தியமில்லை என்றாலும், தக்கவைக்கப்படக்கூடிய முதல் 6 வீரர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Rohit Sharma  Faf Du Plessis  List Of Players IPL Teams Are Likely To Retain Tamil News

அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதேபோல், நேரடித் தக்கவைத்தல் அல்லது ரைட்-டு-மேட்ச் (ஆர்.டி.எம்) கார்டு மூலம் அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதேபோல், நேரடித் தக்கவைத்தல் அல்லது ரைட்-டு-மேட்ச் (ஆர்.டி.எம்) கார்டு மூலம் அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது. இருப்பினும், தக்கவைக்கும் தொகையை  பி.சி.சி.ஐ அதிகரித்துள்ளதால், வீரர்களை தக்கவைத்திருப்பதற்கும், ஆர்.டி.எம் மூலம் ஏலத்தில் வாங்குவதற்கும் இடையே சரியான சமநிலையை அணிகள் கண்டுபிடிக்க வேண்டும். 

இந்த நிலையில், ஏலத்திற்கு முன் அனைத்து 10 அணிகளும் 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதைக் காண்பது மிகவும் சாத்தியமில்லை என்றாலும், தக்கவைக்கப்படக்கூடிய முதல் 6 வீரர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம். 

பி.சி.சி.ஐ. அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ள நிலையில், அதனை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களின் ஜாம்பவான் வீரரான எம்.எஸ் தோனியை தக்கவைக்கலாம். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், மதீஷா பத்திரனா ஆகியரை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

தற்போது மீதமுள்ள 9 அணிகளைப் பற்றி பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அன்ஷுல் கம்போஜ்*.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, முகமது சிராஜ், வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், யாஷ் தயாள்*.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், பில் சால்ட், சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா*.

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், ரஷித் கான், டேவிட் மில்லர், சாய் சுதர்சன், முகமது ஷமி, ராகுல் தெவாடியா*.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல் ராகுல், குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், மயங்க் யாதவ்*.

டெல்லி கேபிட்டல்ஸ்: ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மிட்செல் மார்ஷ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்சர் படேல், அபிஷேக் போரல்*.

பஞ்சாப் கிங்ஸ்: சாம் குர்ரன், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங்*, அசுதோஷ் சர்மா*.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், டி.நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி*

  • அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன் இந்த அன்கேப்டு வீரர்களின் நிலை மாறலாம். பி.சி.சி.ஐ-யின் விதிமுறைகளின்படி, காலக்கெடுவுக்கு முன் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர், அன்கேப்டு வீரராக கருதப்படமாட்டார். ஆனால், ஒரு வீரர் நவம்பர் 01 ஆம் தேதி சர்வதேச அரங்கில் அறிமுகமானால், அவர் இன்னும் ஐபிஎல் 2025 சீசனில் அன்கேப்டு வீரராகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ipl Ipl Cricket Ipl Auction

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: