Rohit Sharma - IND vs PAK Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - ஹர்டிக் பாண்ட்யா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இஷான் கிஷன் 82 ரன்னிலும், ஹர்டிக் பாண்ட்யா 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மீண்டும் அப்ரிடி கையில் அவுட் ஆன ரோகித்
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமாடினர். 4.2-வது ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுத்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்று ஆட்டம் தொடங்கியது. முன்னதாக, போட்டியின் தொடக்கத்தில் ரோகித் இரண்டு பெரிய ஷாட்களை ஆடினார். அதோடு 2 பவுண்டரிகளை விரட்டியும் இருந்தார்.
எனினும், பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக அவரது திணறல் பேட்டிங் தெளிவாகவே தெரிந்தது. மழை நின்று போனதும் அவர் வார்மில் இருப்பதை குறைத்தது. அதனால், அப்ரிடியின் பந்தை எதிர்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது ரோகித் 3வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
— CricDaily24 (@cricday96) September 2, 2023
இந்நிலையில், கேப்டன் ரோகித் மோசமான நிலையில் ஆட்டமிழந்து குறித்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகிறார்கள். கேப்டனும் தொடக்க வீரருமான அவர் மீண்டும் அப்ரிடி கையில் அவுட் ஆகியுள்ளார், 11 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கூறி வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும், ரோகித் அவுட் குறித்து மீம்ஸ் போட்டும் வருகிறார்கள். அவை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Rohit Sharma in high pressure games pic.twitter.com/4UShV5gcsj
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) September 2, 2023
He is Rohit sharma, ICT captain.
He failed in IPL, He hasn’t made any significant contribution since 2021 for ICT.
He is unable to cross 20 runs mark in every match.
With this poor form he is selected as ICT captain.
He has become a liability for the team but due to his… pic.twitter.com/yCD2DET45f— Dr Nimo Yadav (@niiravmodi) September 2, 2023
2 years later & Rohit Sharma still can’t play Shaheen
— Osama. (@ashaqeens) September 2, 2023
குறிப்பாக, தமிழ் படமான சென்னை 600 0028 படத்தில் நடிகர் சிவா பள்ளி சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் போது டக் அவுட் ஆகி வெளியேறுவார். அப்போது அவர் போல்ட்-அவுட் ஆகி வெளியேறி இருப்பார். அதை ரீ-கிரியேட் செய்யும் வகையில் ரோகித் ஆட்டமிழந்துள்ளார் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். தவிர, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ரோகித் ஆட்டமிழந்தது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
ரோகித் சர்மா vs இடது கை வேகப்பந்துவீச்சு
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, ரோகித் சர்மா இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 19 இன்னிங்ஸ்களில் விளையாடி 29 சராசரியில் 228 ரன்களை அடித்துள்ளார். இடது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரின் புள்ளி சதவீதம் 62.7% ஆகும். இது அவர்களுக்கு எதிராக ரோகித் எப்படி ஆடி வருகிறார் என்பதைக் காட்டுகிறது.
இந்திய அணியில் இடது கை வேகப்பந்துவீச்சுக்கு பலவீனமாக இருப்பது கேப்டன் ரோகித்துக்கு மட்டுமல்ல, விராட் கோலி மற்றும் சுப்மான் கில் உள்ளிட்ட மற்ற நட்சத்திர இந்திய பேட்டர்களும் அதற்கு எதிராக பலவீனத்தை வெளிப்படுத்தினர். ஒருநாள் போட்டிகளில் 60க்கு மேல் சராசரியாக இருக்கும் விராட் கோலி, டிரென்ட் போல்ட், ஷஹீன் ஷா அப்ரிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக 34 சராசரி வைத்துள்ளார்.
2023 உலகக் கோப்பையில் சில தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறும் நிலையில், ரோகித் சர்மாவும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றுவதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டடியது அவசியமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.