Advertisment

'தி அல்டிமேட் ஜாட்'... ஓய்வை அறிவித்த தவான் குறித்து ரோகித் உருக்கம்!

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ஆர்வலர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rohit Sharma heartwarming post for Shikhar Dhawan Tamil News

2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது காயமடைந்த ஷிகர் தவான், குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த தவான் இதுவரை 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 2315, 6793 மற்றும் 1759 ரன்களை குவித்துள்ளார்.

Advertisment

ஒருநாள் போட்டிகளில் சராசரி 44.11 மற்றும் டி20 போட்டிகளில் 27.92 சராசரியை வைத்துள்ளார். தவான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில்  17 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களையும் விளாசியுள்ளார். மேலும், அவர் 39 ஒருநாள் அரைசதங்களையும் டி20 போட்டிகளில் 5 அரைசதங்களையும் அடித்துள்ளார். 

இருப்பினும், 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது காயமடைந்த அவர், குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ஆர்வலர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

கோலி நெகிழ்ச்சி 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தது குறித்து அவருடன் களமாடிய இந்திய வீரர்கள் பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள். இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது சமூக வலைதள பதிவில், "பயமறியா வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் நம்பிக்கைமிக்க ஓப்பனராக உயர்ந்தவர் தவான். எண்ணில் அடங்காத நல்ல நினைவுகளை கொடுத்ததற்கு நன்றிகள். உங்களது டிரேடுமார்க் சிரிப்பை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுவோம். வாழ்க்கையின் அடுத்த கட்ட பயணத்திற்கு வாழ்த்துக்கள் கப்பர்" என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

ரோகித் உருக்கம் 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தது குறித்து அவருடன் களமாடிய தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அறைகளைப் பகிர்வது முதல் களத்தில் வாழ்நாள் நினைவுகளைப் பகிர்வது வரை. நீங்கள் எப்போதும் என் வேலையை மறுமுனையில் இருந்து எளிதாக்கினீர்கள். தி அல்டிமேட் ஜாட்." என்று ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Shikhar Dhawan Rohit Sharma Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment